சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி; இன்று வருகை!

சபரிமலை
சபரிமலை
Published on

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு, தினமும் பக்தர்கள் கூட்டம் தினமும் லட்சக்கணக்கில் அலைமோதுகிறது.

இந்நிலையில் திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திர திருநாள் மகாராஜா,  சபரிமலைக்கு அளித்த 450 பவுன் தங்க அங்கிக்கான மண்டல பூஜை இன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் தொடங்கப் படுகிறது. அதையடுத்து இந்த தங்க அங்கி ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு இன்று மாலை சபரி மலை சன்னிதானத்துக்குக் கொண்டு வரப்படுகிறது.

இந்த தங்க அங்கி ஊர்வலம் இன்று மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைகிறது. அங்கிருந்து பக்தர்கள் மேளதாளம்  முழங்க தங்க அங்கியை தலைச் சுமையாக சுமந்துகொண்டு சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டு வருவார்கள். அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் சென்றடையும் தங்க அங்கிக்கு, சிறப்பு வரவேர்பும் அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என்று  திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com