சாலையோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ்..! ரூ.50,000 வரை கடன் பெறும் திட்டம் நீட்டிப்பு..!

Loan for Street Vendors
Street Vendors
Published on

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் சாலையோர வியாபாரிகள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். சாலையோர வியாபாரிகளை ஆதரிக்கும் விதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

இத்திட்டத்தின் படி சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000, ரூ.20,000 மற்றும் ரூ.50,000 என 3 தவணைகளாக கடன் வழங்கப்பட்டது. கடனை சரியாக திருப்பிச் செலுத்தும் வியாபாரிகளுக்கு யுபிஐ உடன் இணைக்கப்பட்ட ரூபே கிரெடிட் கார்டு வழங்கப்பட்டது. 2024 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த இத்திட்டத்தை, தற்போது 2030 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் மூலம் வியாபாரிகள் அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூபே கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அவசரத் தேவை மற்றும் வியாபாரத் தேவைகளை சமாளிக்க முடியும். இதில் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும் வியாபாரிகளுக்கு கடன் தொகையில் ரூ.1,600 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 68 இலட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு சுமார் ரூ.13,797 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தில் 47 இலட்சம் வியாபாரிகள் ரூ.6.09 இலட்சம் கோடி வரை ஆன்லைன் வழியாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்த பணப்பரிவர்த்தனைகள் மூலம் ரூ.241 கோடி தள்ளுபடியையும் வியாபாரிகள் பெற்றுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மட்டுமே செயலில் இருந்த இத்திட்டத்தை தற்போது மறுசீரமைத்து 2030 ஆம் ஆண்டு வரை நீட்டித்து சாலையோர வியாபாரிகளுக்கு நற்செய்தியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதன்படி 2030 மார்ச் 31 வரை இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.7,332 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்தில் கூடுதலாக 50 இலட்சம் வியாபாரிகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
செம திட்டம்..! மின் பற்றாக்குறைக்கு முடிவு கட்டும் இந்தியன் இரயில்வே..!
Loan for Street Vendors

வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் உச்ச வரம்பு முதல் இரண்டு தவணைகளுக்கு இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி முதல் தவணை ரூ.10,000 இல் இருந்து ரூ.15,000 ஆகவும், இரண்டாவது தவணை ரூ.20,000 இல் இருந்து ரூ.25,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாவது தவணை ரூ‌.50,000 ஆகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரத்தைப் விரிவுபடுத்த விரும்பும் வியாபாரிகள் மத்திய அரசின் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அக்டோபர் 17 வரை மட்டுமே கிடைக்கும் LIC-யின் சிறப்புத் திட்டம்..! என்னன்னு உடனே பாருங்க..!
Loan for Street Vendors

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com