
ஆண்ட்ராய்ட் போன்களில் உள்ள லொகேஷன் வசதியை ஆப் செய்து வைத்திருந்த போதும் பயனாளிகளுக்கு தெரியாமல் அவர்கள் இருக்கும் லொகேஷன்களை கூகுள் நிறுவனம் சேகரித்து வைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு, 7000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பல்வேறு வகையான சேவைகளை அளிப்பதற்காக லொகேஷன்களை சேகரிக்கிறது. இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் அதே நேரம் ஆண்ட்ராய்டு போன்களில் சிலர் லொக்கேஷனை ஆப் செய்து வைத்திருப்பவர்கள்.
இவ்வாறு ஆப் செய்து வைத்திருப்பவர்களிடமிருந்து லொகேஷன் தரவுகளை சேகரிக்கக் கூடாது என்பது நிபந்தனை. ஆனால் இவற்றை மீறி கூகுள் நிறுவனம் லொகேஷனை ஆப் செய்து வைத்துள்ள பயனாளர்களிடமிருந்தும் சேகரித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக பயனாளர்களுடைய இருப்பிட லொகேஷன்களை சேகரித்து வைத்துள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. மேலும் பயனாளிகளுடைய நம்பிக்கையை இந்த நிறுவனம் இழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதை அடுத்து கலிபோர்னியா நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க மதிப்பில் 93 மில்லியன் டாலர் அபராதமாக விதித்தது. அதாவது இந்திய மதிப்பில் 7000 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் இந்த குற்றச்சாட்டிற்கு கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் அபராத கட்டணத்தை செலுத்துவதாக தெரிவித்துள்ளது. இது தற்போது உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.