தனது ஊழியர்களைப் புலம்ப வைத்த Google நிறுவனம்.

தனது ஊழியர்களைப் புலம்ப வைத்த Google நிறுவனம்.

லகம் முழுவதும் கூகுள் நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் எல்லா தயாரிப்பு களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்குப் போட்டியாக, கூகுள் நிறுவனமும் தொடர்ந்து புதிய புதிய மென்பொருள் வசதியைக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். 

அதேசமயம் டெக் நிறுவனங்களின் ஆட்குறைப்பு வேலையிலும் கூகுள் நிறுவனம் தன் கைவரிசையைக் காட்டியது. மெட்டா, அமேசான் நிறுவனங்களுக்குப் போட்டியாக தனது ஊழியர்களையும் பாரபட்சம் பார்க்காமல் பணியிலிருந்து விடுவித்தனர். இதனால் கூகுள் நிறுவனத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவி வந்தது. 

இதற்கிடையில், இந்நிறுவனம் சமீபத்தில் தங்கள் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவித்திருந்தது. இருப்பினும் கூகுள் ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகிறார்களா இல்லையா என்பதைக் கண்காணிக்க, ஊழியர்களின் பேட்ஜை ட்ராக்ஸ் செய்யப் போகிறோம் என கூகுள் முடிவு செய்தது. 

இந்த முடிவானது google நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிரான ஊழியர்களின் அதிருப்தியை மீம் வழியே அவர்கள் காண்பித்து வருகின்றனர். அதாவது, எங்களை இன்னும் ஸ்கூல் குழந்தை என நினைச்சுகிட்டு இருக்க. இன்னைக்கு ஆபீஸ் வரலைன்னா நாளைக்கு பேரன்ட்ஸ் கூட்டிட்டு வா என்பது போல பல நகைச்சுவையான மீம்களும், என்னோட வேலையை செக் பண்ணு என் பேட்ஜை இல்ல என்ற காட்டமான மீம்களும் குவிந்து வருகிறது. 

தற்போது வாரத்தில் மூன்று நாள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற ஹைப்பிரிட் பணிக் கொள்கைக்கு மாறியிருக்கும் கூகுள் நிறுவனம், பின்பு பேட்ஜ் மூலம் ஊழியர்களை கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் தலைவர்கள், குழுக்கள் எவ்வாறு செயல்படுகிறது. அலுவலகத்திற்கு யார் அடிக்கடி வருகிறார்கள் வரவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. 

இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு, மேனேஜர்கள் அவர்களை அலுவலகத்திற்கு வருமாறு நினைவூட்டுவார்கள் என கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com