இந்தியாவில் இளம் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணியில் கூகுள் நிர்வாகம்!

இந்தியாவில் இளம் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணியில் கூகுள் நிர்வாகம்!
Published on

கூகுள் நிர்வாகம் தற்போது இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்க்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் இந்திய டெக் ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

உலகளவில் உருவாகியிருக்கும் ரெசிஷன் அச்சம், மந்தமான பொருளாதாரச் சூழ்நிலை ஆகியவற்றைச் சமாளிக்கக் கூகுள், பிற முன்னணி டெக் நிறுவனங்களைப் போலப் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம் தற்போது புதிய ஊழியர்களை அதிகளவில் சேர்க்க முடிவு செய்துள்ளது. தற்போது தேவையான இடத்தில் முக்கியமான பணிகளில் பணியாற்ற ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இது மட்டும் அல்லாமல் இளம் தலைமுறையினரை பணியில் சேர்க்கப்பட உள்ளனர். உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவின் முக்கியக் கல்லூரிகளான ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் இருந்தும் மாணவர்களைத் தேர்வு செய்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் இந்த 12000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் சுமார் 450 பேபர் தங்களது வேலையை இழந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கூகுள் இந்தியாவில் புதிய ஊழியர்களைச் சேர்ப்பதற்காகப் பல வேலைவாய்ப்பு பதிவுகளைத் தனது லின்கிடுஇன் கணக்கில் பதிவிட்டு உள்ளது.

கூகுள் தற்போது மேனேஜர், ஸ்டார்ட்அப் சக்சஸ் டீம், Employee Relations Partner, Startup Success Manager, Google Cloud, Vendor Solutions Consultant, Google Cloud, Product Manager, Database Insights, எனப் பல பதவிகளில் புதிய ஊழியர்களைத் தேடி வருவதாக அறிவித்துள்ளது. இந்த வேவைவாய்ப்புகள் ஹைதராபாத், பெங்களூர், குருகிராம் ஆகிய அலுவலகத்தில் உள்ளது.

அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த அனைத்து டெக் நிறுவனங்களும் தற்போது இளம் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் பணியில் இறங்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com