ஹெல்மெட் போடாதவர்களை அலர்ட் செய்யும் கூகிள் மேப்… இனி நோ டென்ஷன்!

Checking
Checking
Published on

சென்னை போக்குவரத்து போலீஸார் தினசரி எங்கெல்லாம் நிற்கிறார்கள் என்று சொல்லி, ஹெல்மெட் அணியாமல் இருப்பவர்களை அலர்ட் செய்யும் வசதியை கூகிள் மேப் கொண்டுவந்துள்ளது.

வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படும் ஒரு விஷயம், ஹெல்மெட் அணியாமல் போலீஸாரிடம் பிடிப்படுவதுதான். இளைஞர்கள் தெரிந்த இடத்தில் அடிக்கடி பயணிக்கும்போது, போலீஸார் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியும். உடனே அலர்ட்டாகி ஹெல்மெட் போட்டு போலீஸாரிடம் இருந்து தப்பிக்கொள்வார்கள்.

ஆனால், தெரியாத இடமாகயிருந்தால், போலீஸாரிடம் மாட்டிக்கொண்டு, அபராதம் செலுத்துவார்கள். இந்த விஷயத்தில் பலர் மாட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள்.

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், பின் உட்கார்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியாவிட்டால், ஃபைன் செலுத்த சொல்வார்கள். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள்தான் பிடிப்படுவார்கள்.

சிலர் போலீஸாரைப் பார்த்தால் தெரித்து ஓடுவார்கள். அதிலும் சிலர், சோதனையிலிருந்து தப்பிக்க வேறு வழிகளில் சென்று ஊரையே சுற்றுவார்கள். இந்த சிரமங்களைப் போக்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்யும் விதமாகவும், புதிய வசதியை கூகிள் மேப் கொண்டுவந்துள்ளது.

அப்படித்தான் சென்னை போக்குவரத்து போலீசார் தினசரி எங்கெல்லாம் வாக சோதனை செய்வார்களோ அந்த இடங்களை எல்லாம் கூகுள் லோக்கேசனில் நெட்டிசன்கள் அலர்ட் செய்கிறார்கள். இங்கு போலீஸ் சோதனை செய்வார்கள், ஹெல்மெட் போடு என்று அலார்ட் செய்து இடங்களை காண்பிக்கிறார்கள்.

இதனைப் போக்கும் வாகன ஓட்டிகள் உடனே ஹெல்மெட் இருந்தால், அணிந்துக்கொள்கிறார்கள். இல்லையெனில் வேறு பாதையில் செல்கிறார்கள். அப்படித்தான் சென்னை போக்குவரத்து போலீசார் தினசரி எங்கெல்லாம் வாகன சோதனை செய்வார்களோ அந்த இடங்களை எல்லாம் கூகுள் லோக்கசனில் நெட்டிசன்கள் அலர்ட் செய்கிறார்கள். இங்கு போலீஸ் சோதனை செய்வார்கள், ஹெல்மெட் போடு என்று அலார்ட் செய்து இடங்களை காண்பிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே ஜப்பானிய பாஸ்போர்ட் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவதன் காரணம் தெரியுமா?
Checking

சட்டத்தை திருத்ததான் இந்த சோதனைகள், இப்போது நெட்டிசன்கள் இப்படி செய்வது சட்டத்திற்கு புறம்பானதா? இளைஞர்களை உண்மையில் இது காப்பாற்றுகிறதா?

ஏனெனில், சோதனையின்போது மட்டும்போட்டால், அதற்கு முன்னர் சந்திக்கும் விபத்துக்களில் என்னவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com