இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு!

இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு!
Published on

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், கூகுள் நிறுவன CEO ஆன சுந்தர் பிச்சையும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்கு முன்னதாக பிரதமர் மோடி, எலான் மஸ்கையும் சந்தித்துப் பேசியிருந்தார். 

சுந்தர் பிச்சை அவர்கள் நரேந்திர மோடி உடனான சந்திப்புக்குப் பிறகு, குஜராத் மாநிலத்தில்  கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய ஃபைன்டெக் செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளதாகத் தெரிவித்தார். இதுமட்டுமின்றி, சமீப காலமாக இந்தியா டிஜிட்டல் மயமாக்கல் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான நிதியில் சுமார் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்த சுந்தர் பிச்சை, " பிரதமர் மோடி அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமெரிக்க பயணத்தின்போது, அவரை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். பிரதமருடன் பல விஷயங்களை நான் கலந்துரையாடினேன். அதில் குறிப்பாக இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் விஷயத்தையும் பகிர்ந்து கொண்டேன்” என அறிவித்துள்ளார்.

மேலும் சுந்தர் பிச்சை பேசியதாவது, குஜராத்தின் கிப்ட் சிட்டியில், கூகுளின் உலகளாவிய ஃபைன்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதையும் அறிவித்தேன். அவரிடம் தொடர்ந்து பேசுகையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றும் நிறுவனங்களில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறோம். அதில் ஒரு பகுதியாகத்தான் 100 மொழி முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இது விரைவில் இந்திய மொழிகளையும் அதில் இணைக்கும்" என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான தொலைநோக்குப் பார்வை பற்றி சுந்தர் பிச்சை பாராட்டி, இதை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இவர்களுக்குள்ளான சந்திப்பில் சுந்தர் பிச்சை மட்டுமின்றி அமெரிக்க அதிபர் ஜோ பையன், நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்திய நாதெல்லா, மகேந்திரா குழும்பத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, OpenAi CEO சாம் அல்ட்மேன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் கலந்து கொண்டனர். 

இதனால் பிரதமர் மோடியின் இந்த அமெரிக்கப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பல சிறப்பு மிக்க நபர்களையும் அவர் சந்தித்துப் பேசி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com