Chief executive officer of Google Sundar Pichai.
Chief executive officer of Google Sundar Pichai. Marek Antoni Iwanczuk | Sopa Images | Lightrocket | Getty Images

$2.4 பில்லியன் ஒப்பந்தத்தில் கூகுள்: விண்ட்சர்ஃப் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது..!

Published on

"முக்கிய அம்சங்கள்" (Key Points)

  • கூகுள், விண்ட்சர்ஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வருண் மோகனை $2.4 பில்லியன் ஒப்பந்தத்தில் பணியமர்த்தியுள்ளது, ஆனால் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை.

  • விண்ட்சர்ஃபின் சில தொழில்நுட்பங்களுக்கு பிரத்தியேகமற்ற உரிமத்தை கூகுள் பெறுகிறது.

  • இந்த ஒப்பந்தம், ஓபன்ஏஐ-யுடன் $3 பில்லியன் கையகப்படுத்தல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பின்னர் நிகழ்ந்தது.

  • வருண் மோகன் உள்ளிட்ட விண்ட்சர்ஃப் குழு, கூகுளின் டீப்மைண்ட் பிரிவில் ஜெமினி திட்டத்தில் பணியாற்றும்.

  • ஏஐ திறமையாளர்களை ஈர்ப்பதற்கு பெரிய நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் செலவு செய்கின்றன, இது சந்தையில் முன்னணியில் இருக்கும் மூலோபாயமாகும்.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் திறமையானவர்களைப் பணியமர்த்துவதற்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் செலவு செய்யத் தயாராக இருக்கின்றன. கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இத்தகைய முதலீடுகளை ஏன் செய்கின்றன என்று மக்கள் ஆச்சரியப்படுகின்றனர். இந்தப் பெரும் தொகைகள், ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்கால முக்கியத்துவத்தையும், அதை முன்னெடுக்கும் திறமையாளர்களின் அருமையையும் பிரதிபலிக்கின்றன.

ஏஐ துறையில் முன்னணியில் இருக்க வேண்டுமெனில், சிறந்த மனிதவளத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் அவசியம். இந்தப் போட்டியில், திறமையானவர்களை ஈர்ப்பது ஒரு மூலோபாய முதலீடாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்கள் நிறுவனங்களுக்கு நீண்டகால லாபத்தையும், சந்தையில் ஆதிக்கத்தையும் தரவல்லவை. கூகுள் நிறுவனம் விண்ட்சர்ஃப் ஸ்டார்ட்அப்பின் தலைமை நிர்வாகி வருண் மோகனை $2.4 பில்லியன் ஒப்பந்தத்தில் பணியமர்த்தியமர்த்தியுள்ளது. இது ஏஐ(AI) திறமைப் போரில் ஒரு முக்கிய நகர்வாகும்.

கூகுள், விண்ட்சர்ஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வருண் மோகனை $2.4 பில்லியன் ஏஐ திறன் ஒப்பந்தத்தில் பணியமர்த்தியது

OpenAI’s Windsurf ,google - ceo
OpenAI’s Windsurf ,google - ceo

கூகுள், செயற்கை நுண்ணறிவு (AI) திறன் போட்டியில் மற்றொரு முக்கிய முன்னேற்றத்தை அறிவித்து, விண்ட்சர்ஃப் என்ற ஏஐ கோடிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான வருண் மோகனை பணியமர்த்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கூகுள் விண்ட்சர்ஃப் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை, ஆனால் அந்நிறுவனத்தின் சில தொழில்நுட்பங்களுக்கு பிரத்தியேகமற்ற உரிமத்தைப் பெறுகிறது என்ற தகவல்கள் வலம் வருகின்றன.. இந்த ஒப்பந்தத்திற்காக கூகுள் $2.4 பில்லியன் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
கூகுளின் சின்த்ஐடி: ஏஐ உருவாக்கியதை கண்டுபிடிக்கும் புது கருவி! அடேங்கப்பா, AIக்கே ஒரு செக்கா?
Chief executive officer of Google Sundar Pichai.

இந்த ஒப்பந்தம், விண்ட்சர்ஃப் நிறுவனத்தை $3 பில்லியன் மதிப்பில் வாங்குவதற்கு ஓபன்ஏஐ (OpenAI) உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் நிகழ்ந்துள்ளது என்று CNBC ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை முறிந்து போனதைத் தொடர்ந்து, கூகுள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வருண் மோகன் மற்றும் விண்ட்சர்ஃப் நிறுவனத்தின் இணை நிறுவனர் டக்ளஸ் சென் உள்ளிட்ட முக்கிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஊழியர்களை தனது டீப்மைண்ட் (DeepMind) பிரிவில் இணைத்துள்ளது.

“விண்ட்சர்ஃப்" குழுவிலிருந்து சில முன்னணி ஏஐ கோடிங் திறமையாளர்களை கூகுள் டீப்மைண்டிற்கு வரவேற்பதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். இவர்கள் எங்கள் ஏஜென்டிக் கோடிங் (agentic coding) முயற்சிகளை மேம்படுத்துவார்கள்,” என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தக் குழு முக்கியமாக கூகுளின் ஜெமினி (Gemini) திட்டத்தில் பணியாற்றும்.

விண்ட்சர்ஃப் நிறுவனம் தொடர்ந்து சுயாதீனமாக இயங்கும், மேலும் அதன் தொழில்நுட்பத்தை மற்றவர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு சுதந்திரமாக இருக்கும். இந்நிறுவனத்தின் வணிகத் தலைவர் ஜெஃப் வாங் இடைக்கால தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் உலகளாவிய விற்பனைத் துணைத் தலைவர் கிரஹாம் மொரேனோ அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
கூகுள் மேப்ஸில் ரிவ்யூ எழுதினால் பணம் கிடைக்குமா?
Chief executive officer of Google Sundar Pichai.

இந்த நகர்வு, ஏஐ துறையில் திறமையாளர்களை ஈர்ப்பதற்கான தீவிரமான போட்டியை பிரதிபலிக்கிறது. மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு, மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஊதியத் தொகுப்புகளை வழங்கி வருகின்றன. கூகுளின் இந்த ஒப்பந்தம், ஏஐ-இயக்கப்படும் மென்பொருள் மேம்பாட்டுத் துறையில் அதன் முன்னணி நிலையை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com