அண்ணா மேம்பாலத்தில விபத்துக்குள்ளான அரசு பேருந்து!

அண்ணா மேம்பாலத்தில விபத்துக்குள்ளான அரசு பேருந்து!

அண்ணா மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் பகுதிக்கு நடுவே சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து சிக்கியது. அப்போது முதலமைச்சரின் கான்வாய் அப்பகுதியை கடக்கவிருந்ததால் போலீசார் திணறினர். காவலர்கள் உடனே விரைந்து அப்பகுதியின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பேருந்தை மீட்டனர்.

போலீஸ் வட்டாரங்களின்படி, அண்ணா சதுக்கம் மற்றும் பூந்தமல்லி இடையே இயக்கப்படும் MTC பேருந்து (வழி எண் 25 ஜி), எல்ஐசி கட்டிடத்தின் திசையில் இருந்து மேம்பாலம் நோக்கி வந்தது, மேம்பாலத்தின் இடதுபுறம் நோக்கி செல்லும்பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் முன்பகுதி இடதுபுறம் உள்ள சுவர் மீது மோதியது. அதனை அறிந்த ட்ரைவர் பேருந்தை மறுபக்கம் திரும்பியபோது, பின்பகுதி மற்றொரு பக்கவாட்டு சுவரில் மோதியது. அப்பொழுது அப்பெருந்தில் நான்கு பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அண்ணாசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதலமைச்சரின் கான்வாய் அப்பகுதியை கடக்கவிருந்ததால் போலீசார் திணறினர். உடனே போலீசார் MTC கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மீட்பு வாகனத்தை வரவழைத்து மேம்பாலத்தின் தடுப்புச்சுவரின் ஒரு பகுதியை இடித்து பேருந்துதை மீட்டனர். பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மற்றும் கண்டக்டரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com