அரசு மருத்துவர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது: சுகாதாரத் துறை செயலாளர் அதிரடி உத்தரவு!

அரசு மருத்துவர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது: சுகாதாரத் துறை செயலாளர் அதிரடி உத்தரவு!
Published on

ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு அரசு மருத்துவமனைகள்தாம் நோய் இல்லாத வாழ்வுக்கான அடைக்கலமாக உள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்திட அரசு மருத்துவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு காலதாமதமாக வரக்கூடாது என மாநில சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது . இந்த நிலையில், புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதைத் தவிர்க்க, சுகாதார துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி , அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதில், “ அரசு மருத்துவமனைகளில் உள்ள துறை மருத்துவர்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை கட்டாயம் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க வேண்டும் என்றும். அதேபோல், 24 மணி நேரமும் உள் நோயாளிகள் பிரிவை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்றும், மருத்துவ அதிகாரியான R.M.O. காலை 7 மணி முதல் மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் காலை 8 மணி முதல் தொடர்ந்து 24 மணி நேரமும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதேபோல், பல் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும் , மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்பட வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com