அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) காலி பணியிடங்கள்!

அரசு பேருந்து
அரசு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மாநிலத்தில் நீண்ட தூர பயண சேவைகளை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது. இதில், காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசால் இயக்கப்படும் அதி விரைவு பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300 கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

SETC காலி பணியிடங்கள் :

இந்த பணியிடங்களை நிரப்பவுதற்கான அறிவிப்பு இரண்டு முன்னணி செய்தி தாளில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

விண்ணப்பங்கள் இணைய வழியில் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

அரசு போக்குவரத்துக் கழகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (18 மாதங்கள் பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்) நடத்துனர் உரிமம் இருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி: St. john Ambulance Association ஆல் வழங்கப்பட்ட முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, எடை குறைந்தபட்சம் 50 கிலோ இருத்தல் வேண்டும்.

கண் திறன் குறைபாடு இருக்கக் கூடாது.

ஊதிய விகிதம்: ரூ.17,500 முதல் ரூ. 56,200 வரை

மேலாண்மை இயக்குனர் தலைமையிலான தேர்வுக்குழு,வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com