2024 அரசு விடுமுறை
2024 அரசு விடுமுறை

அடடே அடுத்த வருடம் இத்தனை லீவ் இருக்கா? 2024ஆம் ஆண்டின் அரசு விடுமுறை லிஸ்ட்!

தமிழகத்தில் வருடம் தொடங்கும் முன்னரே ஆண்டின் மொத்த விடுமுறையையும் கணக்கு பண்ணுவது மக்களின் வழக்கமாகிவிட்டது. புது காலண்டர் வந்துவிட்டாலே நாம் முதலில் விடுமுறையை தான் கணக்கு பண்ணுவோம். தினசரி வேலை என ஓடி கொண்டிருக்கும் நம் மனது எப்படா விடுமுறை கிடைக்கும் ஓய்வு எடுக்கலாம் என்று ஏங்கும். அப்படி அடுத்த வருடமான 2024ஆம் ஆண்டு மொத்தம் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஞாயிற்றுக்கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2024-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  1. ஜன.1 - திங்கட்கிழமை - ஆங்கிலப் புத்தாண்டு

  2. ஜன.15 - திங்கட்கிழமை - பொங்கல்

  3. ஜன.16 - செவ்வாய்க்கிழமை - திருவள்ளுவர் தினம்

  4. ஜன.17 - புதன்கிழமை - உழவர் திருநாள்

  5. ஜன.25 - வியாழக்கிழமை - தைப்பூசம்

  6. ஜன.26 - வெள்ளிக்கிழமை - குடியரசு தினம்

  7. மார்ச்.29 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி

  8. ஏப்.1 - திங்கட்கிழமை - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)

  9. ஏப்.9 - செவ்வாய்க்கிழமை - தெலுங்கு வருடப் பிறப்பு

  10. ஏப்.11 - வியாழக்கிழமை - ரம்ஜான்

  11. ஏப்.14 - ஞாயிற்றுக்கிழமை - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்

  12. ஏப்.21 -ஞாயிற்றுக்கிழமை - மகாவீரர் ஜெயந்தி

  13. ஏப்.21 - ஞாயிற்றுக்கிழமை - மே தினம்

  14. ஜுன்.17 - திங்கட்கிழமை - பக்ரீத்

  15. ஜுலை.17 - புதன்கிழமை - மொகரம்

  16. ஆக.15 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்

  17. ஆக.26 - திங்கட்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி

  18. செப்.7 - சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி

  19. செப்.16 - திங்கட்கிழமை - மிலாதுன் நபி

  20. அக்.2 - புதன்கிழமை - காந்தி ஜெயந்தி

  21. அக்.11 - வெள்ளிக்கிழமை - ஆயுத பூஜை

  22. அக்.12 - சனிக்கிழமை - விஜய தசமி

  23. அக்.31 - வியாழக்கிழமை- தீபாவளி

  24. டிச.25 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ்

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com