

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மருத்துவ துறையில் தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்பங்கள் சாமானிய பெண்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரையில் உள்ள அரசு இராஜாஜி மருத்துவமனையில் பெண்களுக்காக நவீன மற்றும் எளிய கருத்தடை முறையான 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' (Implanon NXT) எனும் புதிய சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேவையற்ற அல்லது திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தவிர்க்கவும், குடும்பக் கட்டுப்பாட்டிற்காகவும், குடும்ப நலன் மற்றும் குழந்தைப் பிறப்புக்கு இடைவெளி விடவும் பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இது ஆணுறைகள், மாத்திரைகள், கருப்பையக சாதனம் (IUD), ஊசி, மற்றும் நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை (வாசெக்டோமி/டியூபெக்டோமி) போன்ற பல்வேறு தற்காலிக மற்றும் நிரந்தர வழிமுறைகளை உள்ளடக்கியது. உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற சிறந்த கருத்தடை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது (Consultation) அவசியமாகும்.
இதில் சில கருத்தடை சாதனங்கள் பெண்களுக்கு தொந்தரவு தருவதாகவும், அசௌகரியத்தை தருவதாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் கருத்தடை மாத்திரைகள், காப்பர்-டி போன்ற மருத்துவ முறைகளை காட்டிலும் இராஜாஜி மருத்துவமனை அறிமுகப்பட்டுத்தியுள்ள'இம்பிளானன் என்.எக்ஸ்டி' பெண்களுக்கு பாதுகாப்பானது மற்றும் வசதியானது. சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தீக்குச்சி போன்று 3 செ.மீ நீளம் கொண்ட இந்த கருத்தடை சாதனத்தை வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையிலும் பொருத்தப்படுகிறது. தீக்குச்சி வடிவில் சிறியதாக இருப்பதால், கையில் தோலுக்கு அடியில் செலுத்தும்போது தெரியாததது போல் இருப்பதுடன், இதனால், எந்தவித பாதிப்பும் வராது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக சென்னை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு சாதனம். கருத்தடை மாத்திரைகள், காப்பர்-டி போன்ற மருத்துவ முறைகளை காட்டிலும் இது பெண்களுக்கு பாதுகாப்பானது, வசதியானது.
இது தீக்குச்சி போன்று 3 செ.மீ நீளம் கொண்டது. வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையிலும் இந்த சாதனம் பொருத்தப்படுகிறது. தீக்குச்சி வடிவில் இருப்பதால், தோலுக்கு அடியில் செலுத்தும்போது கையில் இருப்பது தெரியாததுபோல் இருக்கும். இதனால், எந்தவித பாதிப்பும் வராது.
அதிநவீன கருத்தடை சாதனமானது, குறுகிய காலத்திற்கு அதாவது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதனை ஒருமுறை உங்கள் கையில் செலுத்தினால் போதும், இதில் இருந்து மருந்து தினமும் உங்கள் உடலில் வெளியாகி கரு உருவாதலை தடுக்கும்.
அதாவது, இது பெண்களின் உடலில் கருத்தடைக்கான ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க செய்து இயற்கை முறையில் கருத்தரிப்பதை தடுக்கிறது.
இதனால் நீங்கள் மூன்று ஆண்டுகள் கர்ப்பம் ஆவதை தடுக்க முடியும். 3 வருடங்கள் கடந்துவிட்டால், அதனை எடுத்து விட்டு புதிதாக வேறு ஒன்றை பொருத்தி கொள்ளலாம். அதேநேரம் ஒரு வருடம் கழிந்த பின்னர் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், உடனடியாக அதனை வெளியே எடுத்துவிடலாம்.
காப்பர் டி போன்ற பழைய முறைகளில் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக குழந்தை பிறப்பு நிகழ வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆனால் இந்த புதிய இம்பிளானன் முறையில் அத்தகைய சிக்கல்கள் மிகக் குறைவு என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்..
18 வயது முதல் 45 வரை உள்ள பெண்களுக்கு இந்த கருத்தடை சாதனம் பொருத்தப்படுகிறது. இதன் விலை ரூ.3000 என்றாலும், அரசு மருத்துவமனைகளில் உள்ள பெண் நோயாளிகளுக்கு இது இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தை உடலில் பொருத்துவதால் எந்தவித தொந்தரவு, அசவுகரியமும் இருக்காது என்பதால் நாம் நமது அன்றாட பணிகளை செய்ய முடியும். குறிப்பாக, இதய நோய் உள்ளிட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சாதனம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் இத்தகைய நவீன வசதிகள் இலவசமாகக் கிடைப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். வரும் காலங்களில் 'இம்பிளானன் என்.எக்ஸ்டி' முறை, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று கூறிய மருத்துவர்கள், இந்த சாதனத்தை பொருத்த விரும்பும் பெண்கள் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவை அணுகிப் பயன் பெறலாம் என்றும் தெரிவித்தனர்.