குட்நியூஸ்..! இனி ATM-ல் ரூ.10, ரூ.20 நோட்டுகள் கிடைக்கும்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!

ரூ.500 நோட்டை வழங்கினால் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து சில்லறையை பெறும் வகையில் புதிய ஹைபிரிட் ஏடிஎம்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ATM
ATMhttps://tamil.oneindia.com
Published on

இந்தியாவில் நிலவும் சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய அரசு புதிய ஹைபிரிட் ஏடிஎம்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், வியாபாரிகள் அன்றாடம் சந்திக்கும் சில்லறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

இந்தியாவில் தற்போது மக்கள் அனைவருமே யுபிஐ மூலமே அதிகளவு பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சாலையோரை கடை முதல் மிகப்பெரிய மால்கள் வரை அனைத்திலுமே யுபிஐ பரிமாற்றம்தான் முன்னிலை வகிக்கிறது. இதனால், மக்களிடையே ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது.

அந்த வகையில், இந்தியாவில் மக்களின் கையில் ரொக்கமாக 500, 200 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வைத்துள்ளனர். 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் என்பது வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் திடீரென்று கடைகளில் ஏதேனும் பொருட்கள் வாங்கி விட்டு 200 ரூபாய் பணம் கொடுத்தால் கடைக்காரார்களுக்கு சில்லறை கொடுப்பதில் சிக்கல் நிலவுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில் 10, 20, 50 ரூபாய் நோட்டுக்களின் தட்டுப்பாடு தான் தற்போது அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனைகை்கு தீர்வு காண மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏடிஎம்-மில் பணம் இல்லையா? இனி நோ டென்ஷன்!
ATM

அதற்காக, ஏடிஎம்களில் ரூ.500, ரூ.200 ரூ.100 நோட்டுகள் வருவது போல் 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, பொதுமக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், ரூ.100, ரூ.500 நோட்டுக்களை ஏடிஎம் இயந்திரத்தில் வைத்து சில்லறையாக 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளும் வகையில் வசதி கொண்ட புதிய 'ஹைப்ரிட் ஏடிஎம்' இயந்திரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பெரிய மதிப்புள்ள நோட்டுகளை சிறிய நோட்டுகளாகவும் நாணயங்களாகவும் மாற்றிக் கொடுக்கும் ஹைபிரிட் ஏடிஎம் செயல்படும். வழக்கமான ஏடிஎம் மற்றும் காயின் வெண்டிங் மெஷின் ஆகிய இரண்டின் வசதிகளும் ஒரே இயந்திரத்தில் இருக்கும். இதன் மூலம், ரூ.500க்கு சில்லறை வாங்க பொதுமக்கள் வங்கிகள் அல்லது கடைகளுக்கு அலைய வேண்டிய அவசியம் குறையும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சோதனை தற்போது மும்பையில் அதிகப்படியான சில்லரை பரிவர்த்தனை நடைபெறும் ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது. அதாவது மும்பையில் பணப்புழக்கம் அதிகம் உள்ள லோக்கல் மார்க்கெட், ரெயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம், மருத்துவமனைகள், அரசு அலுலகங்களில் இத்தகைய ஏடிஎம்கள் இயந்திரங்களை நிறுவி சோதனை நடந்து வரும் நிலையில் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-ல் பணம் எடுப்பது எப்படி? முழு வழிகாட்டி!
ATM

அதுமட்டுமின்றி 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை அச்சிடுதல் மற்றும் வங்கிகளில் இந்த நோட்டுக்களின் புழக்கம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவது வங்கிகளுக்கு சவாலாக இருக்கும். இதனை சரிசெய்ய 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சடிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com