அரசு பள்ளி மாணவர் சேர்ப்பு 11 லட்சமாக உயர்வு! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளியில் வரும் 2023-24 கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சேர்க்கை நேற்று துவங்கியது. இதனை சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது 11 லட்சமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். அதில் அவர், அரசு பள்ளிகளில் பல சலுகைகளை நாங்கள் கொடுத்து வருகிறோம். அரசு பள்ளிகளை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் குறைபாட்டினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது குறித்து வேண்டுகோள் வைத்துள்ளோம்.

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியில் நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறோம்.

தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் தங்கள் பள்ளி கட்டமைப்புகளை கொண்டே கட்டணம் வசூலிக்கிறார்கள்.இதனை கண்காணிக்க கட்டண ஆய்வுக் குழு உள்ளது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொது மக்களிடத்தில் அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, அமைச்சர் சேகர் பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com