தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் பள்ளிச் செலவை அரசே ஏற்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் பள்ளிச் செலவை அரசே ஏற்கும் -   அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Published on

தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குதான் சகல வசதிகளும் இருக்கும். அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு, நிகழ்ச்சி அரங்கம், விளையாட்டு மைதானம் போன்ற இன்னும் பிற வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை கொள்கையில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில் தான் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. கலை, அறிவியல், விளையாட்டு, கட்டுரைப்போட்டி, வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் தங்களை பல துறைகளில் மேம்படுத்திக்கொள்ள ஆர்வதையும் ஊக்குவித்தன.

இதே போன்று அரசு பள்ளிகளிலும் கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் பல மாணவர்களின் தனித் திறமை வெளிப்பட்டது. பல சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆனார்கள். இந்த கலைநிகழ்ச்சிகள் பெரிய அளவில் கவனம் பெற்றது. இதில் சிலர் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கும் அளவிற்கு கவனம் பெற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் படிப்பிலும் சரி, மற்ற எந்த போட்டியானாலும் சரி, எதிலும் குறைந்தவர்கள் அல்ல என நிருபித்தனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

அதன்படி தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயில விரும்பும் மாணவர்கள் மார்ச் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 25% இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் நோக்கில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள, தனியார் பள்ளிகளில் படிக்க விருப்பம் உள்ள, வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. அவர்கள் மட்டும்தான் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான 25% இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20ம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு ஏழை மாணவர்களுக்கு மட்டுமேபொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com