ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் !

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் !

இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த சட்ட முன்முடிவை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா , காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் , ஓ.பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள், பாமக வின் ஜி.கே.மணி மற்றும் பாஜக வின் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஏகமனதாக ஆதரவு தெரிவித்ததையடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா நிறைவேறியதாக சபநாயாகர் அப்பாவு அறிவித்தார்.

சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இரண்டாவது முறையாக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இரண்டாம் முறை சட்ட மன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்பது விதியாகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com