‘இளைஞர்களின் கல்வி மேம்பாட்டை அதிகரிக்கும் தேசிய கல்விக் கொள்கை’ ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

‘இளைஞர்களின் கல்வி மேம்பாட்டை அதிகரிக்கும் தேசிய கல்விக் கொள்கை’ ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
Published on

யர்கல்வி நிறுவனப் பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது குறித்து உதகை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும், இன்று மற்றும் நாளை நடைபெறும் இரண்டு நாட்கள் கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்தக் கருத்தரங்கில், தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்கள் பல்கலைக் கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் தமிழில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. இந்தக் கருத்தரங்கில், பல்கலைக் கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் ஆன்லைன் மூலம் துணை வேந்தர்களிடம் உரையாற்ற இருக்கிறார்.

இந்தக் கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி, உயர்கல்விக்கும் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இளைஞர்களின் திறனுக்கேற்ற கல்வி அவர்களுக்கு வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தேசிய கல்விக் கொள்கையில் இளைஞர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தேசிய கல்விக் கொள்கை இளைஞர்களின் திறனை மேலும் அதிகரிக்கும்.

இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஆங்கிலத் திறன் குறைபாடு உள்ளது. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். மேலும், இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது. காலத்துக்கேற்ற கல்வி மாணவர்களுக்குக் கிடைக்காததால் அவர்களின் திறன் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி உள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் லக்னோ, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பலரும் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com