அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைபடி உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக நேற்று முதல் அகவிலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ஏற்கனவே உள்ள அகவிலைப்படி 34 சதவீதம் என்பது நேற்று முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார். இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட அரசு முடிவு எடுத்துள்ளது.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது நேற்று முதல் செயல்படுத்திட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகின்றனர்.

வெளியிடப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2359 கூடுதலாக செலவாகும்

சமவேலை சம ஊதியம் கோரி போராடி வரும் ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும்,

அந்த குழு பரிந்துரைக்ளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil nadu arasu
Tamil nadu arasu

அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து போராடி வந்த ஊழியர்களுக்கு இன்று புத்தாண்டு பரிசாக 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை ஏற்று, 2023ம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடி மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com