சென்னையில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு: ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் பாராட்டு!

Praggnanandhaa
Praggnanandhaa

ஜர்பைஜானில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டருமான பிரக்ஞானந்தா இன்று தமிழகம் திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று சென்னை திரும்பி பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் செஸ் வீரர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க குவிந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா கூறியதாவது, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு சென்னை விமான நிலையத்தில் இவ்வளவு பெற வரவேற்பு அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கவில்லை. இந்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. உலக செஸ் போட்டியில் வெற்றிப்பெற்ற பிறகு அடுத்து உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டிக்கு தகுதிப்பெற்றிருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இது முக்கியமான போட்டியாகும்.

அந்த டோர்னமெண்ட் ரொம்ப சவாலானதாக இருக்கும். அதில் வெற்றிபெறுவதுதான் என்னுடைய அடுத்த இலக்கு. அடுத்தடுத்து நிறைய போட்டிகள் வரவுள்ளது, அதற்கு தயாராக கொஞ்சம் ஓய்வு எடுக்கவேண்டும். செஸ் விளையாடும் வீரர்கள் எப்போதும் விளையாடுவதுபோல் விளையாடுங்கள். பதட்டம் இல்லாம் ஜாலியாக விளையாடவேண்டும். வெற்றி, தோல்வி பற்றி எல்லாம் விளையாடும் போதும் யோசிக்கத் தேவையில்லை என்றார்" என்றார்.

பிரக்ஞானந்தா வீடுதிரும்பியது குறித்து அவரது சகோதரி கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் பெற்று திரும்பிய போது இதே போன்ற ஒன்றை நான் பார்த்தேன். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாங்கள் எல்லோரும் அவரை வரவேற்க விமானநிலையம் சென்றிருந்தோம். பிரக்கியும் (பிரக்ஞானந்தா) அனைத்து மக்களிடமிருந்தும் அதே அன்பைப் பெறுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்

உலக ரேபிட் செஸ் டீம் சாம்பியன்ஷிப்

முன்னதாக, ஜெர்மனியில் கடந்த 27-ம் தேதி தொடங்கிய உலக ரேபிட் செஸ் டீம் சாம்பியன்ஷிப் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில், 43 அணிகளை சேர்ந்த 300 வீரர்கள் கலந்துகொண்டனர். 12 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்ற WR அணி 10 வெற்றி மற்றும் 2 டிரா என 702 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

WR Chess is the champion
WR Chess is the champion

உலக கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்று பாராட்டுகளை குவித்த நிலையில், தற்போது மீண்டும் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற அணியின் பிரக்ஞானந்தா முக்கிய பங்காற்றி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

முதலமைச்சர் வாழ்த்து

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார் பிரக்ஞானந்தா. இச்சந்திப்பின்போது பிரக்ஞானந்தாவின் தாயார், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மற்றும் செஸ் அமைப்பின் தலைவர்கள் உடனிருந்தனர். இச்சந்திப்பின்போது, உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா பெற்ற வெள்ளி பதக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பிரக்ஞானந்தாவுக்கு அணிவித்தார். அதேபோல் தமிழக அரசு சார்பில் வெள்ளி கேடயமும், 30 லட்சம் ரூபாய் ஊக்கம்தொகை வழங்கி பிரக்ஞானந்தாவை முதலமைச்சர் ஸ்டாலின் கௌரவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com