இந்தியப் பெருங்கடலில் ராட்சத ஈர்ப்புத் துளை கண்டுபிடிப்பு. 

இந்தியப் பெருங்கடலில் ராட்சத ஈர்ப்புத் துளை கண்டுபிடிப்பு. 
Published on

லங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் ராட்சத ஈர்ப்புத்துளை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மேலும் அது எதனால் ஏற்பட்டது என்பதையும் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. 

இலங்கைக்கு தெற்கே ஏற்பட்டுள்ள இந்த ராட்சத கிராவிட்டி துளையை பெங்களூருவைச் சேர்ந்த ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தத் துளை இருக்கும் இடத்தில் ஈர்ப்பு விசை சராசரியை விட குறைவாக உள்ளது. இதனால் அந்த இடத்தில் கடல் மட்டம் சராசரியை விட 100 மீட்டர் குறைவாக உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இது குறித்த ஆய்வை ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் மேற்கொண்டபோது, கடந்த 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது உருவாகத் தொடங்கியுள்ளதாகவும், ஏற்கனவே இது தொடர்பான பல விவரங்கள் புவியியல் ஆய்வுக் கடிதங்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி மால்டன் ராக் எனப்படும் இறுகிய பாறைக் குழம்பின் பற்றாக்குறையே இந்தத் துளை உருவாகக் காரணம் என்கின்றனர். 

இதற்காக, பெங்களூரு இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள், கடந்த 140 மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட டெக்கானிக் தட்டு இயக்கங்களை புனரமைத்து, ஈர்ப்புத் துளையின் தோற்றத்தை கண்டறியும் கணினி மாதிரிகளை உருவாக்கினர். இதன் மூலமாக டெக்னிக் தகடுகளின் சில பகுதிகள் ஆப்பிரிக்காவின் கீழுள்ள மேண்டில் வழியாக மூழ்கி, இந்தியப் பெருங்கடலுக்கு அடியிலிருந்து பிளவுகளை உருவாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 

இதனால் பூமியில் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், புவியீர்ப்பு விசை, டெக்கானிக் தகடுகளின் இயக்கம் போன்றவற்றால் பூமியில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் எனவும் ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு கட்டுரையில் தெளிவாக எழுதியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com