BTS ஜங்கூக் செய்த உன்னத செயல்!

BTS ஜங்கூக் செய்த உன்னத செயல்!

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவ செலவுகளுக்காக 8211 கோடியை BTS குழுவை சேர்ந்த ஜங்கூக் வழங்கியுள்ளார். 

உலகிலேயே மிகவும் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்றுதான் தென்கொரியாவைச் சேர்ந்த BTS. இதில் வி, ஜிமின், ஜங்கூக், ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப் என்ற ஏழு இளைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வசீகரத் தோற்றம், நடனம், குரல் மற்றும் உற்சாகப் பாடல்களால் உலகெங்கிலுமுள்ள மக்களின் மனங்களைக் கவர்ந்து வருகிறார்கள். இந்தியாவிலும் இவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இவர்கள் மிகவும் பிரபலமானவர்கள். 

2010ல் உருவாக்கப்பட்ட இந்த இசைக்குழு, கடந்த 2013ம் ஆண்டு முதல் 'பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்' என்ற நிறுவனத்தின் கீழ், ஏராளமான பாடல்களையும், இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல்கள் நூற்றுக்கணக்கான விருதுகளையும் பல கின்னஸ் சாதனைகளையும் அள்ளிக் குவித்துள்ளது. இவர்கள் மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கு அவர்களின் பாடல்களும், தோற்றமும் மட்டுமே காரணமல்ல. இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து மக்களுக்கு செய்து வரும் உதவிகளும்தான். 

உலகையே உலுக்கிய அமெரிக்காவில் நடந்த 'ஜார்ஜ் பிளாய்ட்' என்ற நபரின் கொலையை அடுத்து, BTS மற்றும் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான Big Hit உடன் இணைந்து சுமார் 16 கோடி ரூபாயை கருப்பினத் தவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நிதியாக வழங்கினர். மேலும் தென்கொரியாவில் அமைந்துள்ள யுனிசெஃப் அமைப்பிற்கு 5 கோடியும் வழங்கியுள்ளார்கள். 

இது மட்டுமின்றி, அவர்கள் நடத்தும் இசைக்கச்சேரிகளில் பயன்படுத்தும் உடைகளை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை உலகளவில் பல்வேறு நலத்திட்டங் களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வரிசையில் BTS குழுவில் இருக்கும்  ஜங்கூக் என்பவர் சியோலிலுள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு ரூபாய் 8211 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த தொகையை, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்காக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து ஜங்கூக் கூறுகையில், "மருத்துவமனையில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இது பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவர்கள் முகத்தில் புன்னகையைக் காண நான் என்றும் முழு ஆதரவு அளிப்பேன்" என தெரிவித்தார். 

ஜங்கூக்-ன் இந்த உன்னதமான செயலுக்கு அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com