விண்ணில் பாய காத்திருக்கும் ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் !

விண்ணில் பாய காத்திருக்கும் ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் !
Published on

ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-01 செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

இந்த செயற்கை கோள் தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்எல்வி-எஃப்12 செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் மே 29 இன்று காலை 10. 41 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான 27 மணி 30 நிமிட கவுன்ட்- டவுன் காலை 7. 21 மணிக்கு தொடங்கியது.

என்விஎஸ்-01 செயற்கைக் கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் எல்1, எல்5 மற்றும் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. புவிநிலைச் சுற்றுப்பாதையில் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம்’ மற்றும் நேர தகவலை துல்லியமாக வழங்க முடியும் என கூறப்படுகிறது. 

.இந்த ராக்கெட்டின் மூலம் NVS-01 என்கிற 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் வகை செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட வழிகாட்டும் செயற்கைக்கோளாகும். நிலம் மற்றும் கடற்பரப்பில் பயணிக்கும் இடம் மற்றும் தொலைவை மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என கூறப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 15ஆவது விண்வெளி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com