
மத்திய அரசு மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு விகிதம் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறையவுள்ளன. அந்த வகையில் மக்களிள் அதிகளவில் பயன்படுத்தும், ஆவின், அமுல், நந்தினி போன்ற பால் பொருட்களின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி பொருட்களின் பழைய விலையையும், அதன் தற்போதைய புதிய விலையையும் அறிந்து கொள்ளலாம்.
ஆவின் பொருட்களின் விலை குறைப்பு பட்டியல்:
ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவின் நெய், பன்னீர் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
500 கிராம் வெண்ணெய் ரூ.50 வரை குறைவாக ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நெய் 50 மி.லி. (ஜார்) ரூ.48 லிருந்து ரூ.45 ஆகவும், 100 மி.லி. ரூ.85 லிருந்து ரூ.80 ஆகவும், அரை லிட்டர் ரூ.365 லிருந்து ரூ.345 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.700 லிருந்து 660 ஆகவும், 5 லிட்டர் ரூ.3,600 லிருந்து ரூ.3,250 ஆகவும் விலை குறைந்துள்ளது.
15 கிலோ நெய் (டின்) ரூ.11,880 லிருந்து ரூ.10,725-க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் நெய் (அட்டை பெட்டி) ரூ.690 லிருந்து ரூ.650 ஆகவும், அரை லிட்டர் ரூ.360 லிருந்து ரூ.340 ஆகவும், 15 மி.லி பாக்கெட் ரூ.12 லிருந்து ரூ.10 ஆகவும், 100 மி.லி. பாக்கெட் ரூ.80 லிருந்து ரூ.75 ஆகவும் விலை குறைந்துள்ளது.
ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ரூ.110-க்கும், ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட அரை கிலோ பன்னீர் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
150 மில்லி ஆவின் UHT பால் விலை 12 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக விலை குறைந்துள்ளது.
அமுல் பொருட்களின் விலை குறைப்பு பட்டியல்:
பால், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 700 பொருட்களின் விலையை குறைக்க உள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், புதிய விலை பட்டியலின்படி ஒரு லிட்டர் நெய் விலை 40 ரூபாய் குறைக்கப்பட்டு 610 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீஸ் ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டு 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
வெண்ணெய் (100 g) - பழைய விலை ரூ.62- புதிய விலை ரூ.58
வெண்ணெய் (500 g) - பழைய விலை ரூ.305 - புதிய விலை ரூ.285
ஹை ஆரோமா பசு நெய் (500 ML) பழைய விலை ரூ.365 - புதிய விலை ரூ.345
பன்னீர் (ஃபிரெஷ்) (200g) - பழைய விலை ரூ.105 - புதிய விலை ரூ.101
பன்னீர் (ஃபுரோஸன்)(200g) - பழைய விலை ரூ.120 - புதிய விலை ரூ.117
சீஸ் ஸ்லைஸ் (200g) - பழைய விலை ரூ.149 - புதிய விலை ரூ.140
சீஸ் க்யூப் (200g) - பழைய விலை ரூ.25 - புதிய விலை ரூ.200
சீஸ் டைஸ்டு பிளெண்ட் (200g) - பழைய விலை ரூ.129 - புதிய விலை ரூ.120
பட்டர் குக்கீஸ் - பழைய விலை ரூ.85 - புதிய விலை ரூ.75
மிட்டாய் மேட் - பழைய விலை ரூ.130 - புதிய விலை ரூ.122
அமுல் லைட் - பழைய விலை ரூ.100 - புதிய விலை ரூ.94
சாக்லேட் சிரப் (250g)- பழைய விலை ரூ.70 - புதிய விலை ரூ.65
அமுல் ஐஸ்கிரீம் :
வென்னிலா/ ஸ்ட்ராபெர்ரி கப் (55 ML) - பழைய விலை ரூ.10 - புதிய விலை ரூ.9
பட்டர்ஸ்காட்ச்/ சாக்லெட் ட்ரைகோன் - பழைய விலை ரூ.35 - புதிய விலை ரூ.30
ஷுகர் ஃப்ரீ ஷாஹி அஞ்ஜீர் - பழைய விலை ரூ.50 - புதிய விலை ரூ.45
பஞ்சாபி குல்ஃபி - பழைய விலை ரூ.25 - புதிய விலை ரூ.20
வென்னிலா மேஜிக் டப் - பழைய விலை ரூ.195 - புதிய விலை ரூ.180
டார்க் சாக்லேட் - பழைய விலை ரூ.200 - புதிய விலை ரூ. 180
சாக்கோ மினி - பழைய விலை ரூ.140 - புதிய விலை ரூ. 130
வே புரோட்டீன் சாக்லேட் - பழைய விலை ரூ.4100 - புதிய விலை ரூ.3690
நந்தினி பால் பொருட்கள் விலை குறைப்பு :
நந்தினி பால், தயிர் விலை குறையாது. ஆனால் நந்தினி பால் பொருட்களின் விலை மட்டுமே குறைக்கப்படுகிறது.
அதன்படி நந்தினி நெய் ஒரு லிட்டர் பை ரூ.650-ல் இருந்து ரூ.610 ஆக குறைக்கப்படுகிறது. அதுபோல் வெண்ணெய் அரை லிட்டர் ரூ.305-ல் இருந்து ரூ.286 ஆகவும், பன்னீர் ஒரு கிலோ ரூ.425-ல் இருந்து ரூ.408 ஆகவும், பாலாடை கட்டி(சீஸ்) ஒரு கிலோ ரூ.480-ல் இருந்து ரூ.450 ஆகவும், பதப்படுத்தப்பட்ட பாலாடை கட்டி ஒரு கிலோ ரூ.530-ல் இருந்து ரூ.497 ஆகவும் குறைக்கப்படுகிறது.
மேலும் குட்லைப் பால் ஒரு லிட்டர் ரூ.70-ல் இருந்து ரூ.68 ஆகவும், ஐஸ்கிரீம்கள் வெண்ணிலா டப் ஒரு கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.178 ஆகவும், பேமிலி பேக் ஐஸ்கிரீம் 5 லிட்டர் ரூ.645-ல் இருந்து ரூ.574 ஆகவும், ஐஸ்கிரீம் சாக்லெட் சண்டே அரை லிட்டர் ரூ.115-ல் இருந்து ரூ.102 ஆகவும், ஐஸ்கிரீம் மேங்கோ நேச்சுரல் 100 கிராம் ரூ.35-ல் இருந்து ரூ.31 ஆகவும் குறைக்கப்படுகிறது.