ஜிஎஸ்டி செலுத்தாதவர்கள் அமலாக்கத் துறையால் கைதாகலாம் ; அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!

ஜிஎஸ்டி செலுத்தாதவர்கள் அமலாக்கத் துறையால் கைதாகலாம் ; அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!

ஜிஎஸ்டியும், அமலாக்கத் துறையும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதற்காக பண மோசடி சட்டம் திருத்தம் 2022 மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது, ஜிஎஸ்டியை அமலாக்கத் துறையுடன் இணைத்து இருப்பது மிகவும் ஆபத்தான நடவடிக்கை. ஜிஎஸ்டி என்பது மறைமுக வரி ஆனால் வருமான வரியோ நேரடி வரி மறைமுக வரியை யார் செலுத்துகிறார், யார் செலுத்தவில்லை என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது என்பது எளிய மக்களையும் பாதிக்கும்.

சிறிய வணிகர்கள் பெரும்பாலானோர் ஜிஎஸ்டி செலுத்துவதில்லை, சிலரும் கட்டாயத்தின் பெயரில் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். இந்த நிலையில் ஜிஎஸ்டி செலுத்தாத ஒருவரை அமலாக்கத்துறை நேரடியாக கைது செய்ய முடியும் என்பது இந்த சட்ட திருத்தத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இதனால் மத்திய அரசுக்கு பிடிக்காத தொழிலதிபர்கள் சிறு வணிகர்கள் கூட அமலாக்க துறையால் கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம்‌. ஏனென்றால் தற்போது அமலாக்க துறையை பயன்படுத்தி தான் ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை பிஜேபியில் சேர்த்து வருகின்றனர். ஜிஎஸ்டியையும் அமலாக்க துறையும் இணைத்து இருப்பது சிக்கலான நடைமுறை, இந்தியாவில் இருக்கக்கூடிய சிறு வர்த்தகர் மற்றும் தொழிலதிபர்கள் மீது திணிக்கப்படும் அநீதி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று நடைபெறவுள்ள ஜி எஸ் டி கவுன்சில் 50வது கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இதுகுறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com