ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்!

A. R. Rahman
A. R. Rahman

பிரபல இசையமைப்பாளர் ஜிஎஸ்டி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக கூறி  ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபராதம் செலுத்தக் ஜிஎஸ்டி ஆணையம் அவருக்கு கடந்த 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.  இதை எதிர்த்து,  ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின்  வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்டதாவது:

 ஏ.ஆர்.ரஹ்மான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையிலேயே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மற்றபடி அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை. மேலும் அவர்  ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு அளித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்தாததால் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் மற்ற பாடலாசிரியர்கள், பாடகர்கள், கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவைகளை பயன்படுத்தி இசையை பதிவு செய்தார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் அவரிடம் வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்

-இவ்வாறு ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com