மனைவி கோபமாக இருக்கா… லீவு தாங்க… அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்த காவலர்!

மனைவி கோபமாக இருக்கா… லீவு தாங்க… அதிகாரிக்கு வேண்டுகோள் விடுத்த காவலர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், எல்லை படைப்பிரிவு காவலர் ஒருவர், தான் வீட்டுக்குச் செல்லாததால் மனைவி கோபமாக இருப்பதை சுட்டிக்காட்டி விடுமுறை கேட்டு உயர் அதிகாரிக்கு எழுதிய விண்ணப்ப கடிதம் வைரலாகி உள்ளது.

மெள மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில், நெளதன்யா என்ற இடத்தில் இந்திய-நேபாள எல்லைப் படைப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

விடுமுறை கிடைக்காததால் அவரால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இதனால் அவரது மனைவி கோபமாக இருக்கிறாராம். இதையடுத்து ரமேஷ்குமார், உயர் அதிகாரிக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதில் “ எனக்கு விடுமுறை கிடைக்காததால் கோபமாக இருக்கும் என் மனைவி என்னுடன் பேசுவதில்லை. நான் பலமுறை அவரை செல்போனில் அழைத்தும் அவர் என்னுடன் பேசாமல், தாயாரை விட்டு பேசச் சொல்கிறார். எனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று உறுதியளித்துள்ளேன். ஆனால், விடுமுறை கிடைக்காவிட்டால் என்னால் வீட்டிற்கு செல்ல முடியாது. எனவே எனக்கு விடுமுறை அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காவலர் ரமேஷ்குமாரின் விடுமுறை விண்ணப்பத்தை படித்த உயர் அதிகாரி, அவருக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஐந்து நாள் விடுமுறை அளித்துள்ளார்.

காவல்துறையினர் அவர்களின் தேவைக்கு ஏற்ப விடுமுறை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், விடுப்பு காரணமாக பணியில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் அந்த உயர் அதிகாரி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com