கின்னஸ் சாதனை படைத்த நாக்பூர் இரண்டு - அடுக்கு மேம்பாலம்!

இரண்டு - அடுக்கு மேம்பாலம்
இரண்டு - அடுக்கு மேம்பாலம்

நாக்பூரில் மிக நீளமாகக் கட்டப்பட்ட இரண்டு - அடுக்கு மேம்பாலத்தை உருவாக்கியதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மகாராஷ்டிர மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்த சாதனை படைத்ததற்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது;

நாக்பூரில் கட்டப்பட்ட இந்த இரண்டு –அடுக்கு மேம்பாலம் ஏற்கனவே ஆசியா புக் ரெகார்ட் மற்றும் இந்தியா புக் ரெகார்ட் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. இப்போது கின்ன்ஸ் சாதனை விருதும் கைடித்திருப்பது மிகவும் பெருமையான தருணம்!

இந்த மேம்பாலத்தை உருவாக்க அல்லும் பகலும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணியாற்றிய பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் தன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com