குஜராத் சட்டமன்ற தேர்தல்: ராகுல் காந்தி வேண்டுகோள்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

 இன்று குஜராத் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவுகள் நடந்து வரும் நிலையில், இத்தேர்தல் குறித்து ராகுல்காந்தி எம்பி தன் டிவிட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இன்று குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் தொடங்கியுள்ளது. இந்த முறை இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என்று மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் குஜராத்தில் மொத்த 182 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இச்சமயத்தில் காங்கிரஸ் எம்.பி-யான ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவை பதித்துள்ளார். அதில்,அவர் தெரிவித்ததாவது:

 குஜராத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,அனைவரும் வாக்களியுங்கள். வேலை வாய்ப்புகள் பெறவும், மலிவான விலையில் எரிவாயு சிலிண்டர் பெறவும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்திடவும் வழ்செய்யும் வகையில் இத்தேர்தலில் வாக்களியுங்கள். குஜராத்தின் முற்போக்கான எதிர்காலத்திற்காக, பெருந்திரளாக வாக்களித்து இந்த ஜனநாயக திருவிழாவை வெற்றியடையச் செய்யுங்கள்.

-என ராகுல் காந்தி தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com