குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த தேர்ச்சி விகிதம்!

குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த தேர்ச்சி விகிதம்!

குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் வெறும் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த தேர்வில் குஜராத்தில் உள்ள 272 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன. 1084 பள்ளிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமே பதிவாகி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு SSC என்று அழைக்கப் படுகிறது. அந்த வகையில் 2022 – 2023 கல்வியாண்டில் படித்த மாணவ மாணவிகளுக்காக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 7.34 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்ப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் காலை 8 மணியளவில் gseb.org என்று இணையதள முகவரியில் வெளியாகின. குஜராத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைய குறைந்த பட்சம் 33 சதவீத மதிப்பெண்களையாவது பெற வேண்டும்.

இந்த நிலையில் குஜராத் கல்வித்துறை வெளியிட்டு இருக்கும் தேர்வு முடிவுகளின்படி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதாவது தேர்வு எழுதிய 7,34,898 பேர்களில் 4,74,893 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

இவர்களில் 6,111 பேர் மட்டுமே A1 கிரேட் பெற்று உள்ளார்கள். 44480 பேர் A2 கிரேடில் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர், B1 கிராடை 86611 பேரும், B2 கிரேடை 1,27,652 பேரும், C1 கிரேடை 1,39,248 பேரும், C2 கிரேடில் 67,373 பேரும், D கிரேடில் 3,412 பேரும், E1 கிரேடில் 6 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com