குஜராத்திகளுக்கு இனிப்பு என்றால் இஷ்டம்; மதராசிகளுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்! மெகா சர்வே முடிவுகள்!

குஜராத்திகளுக்கு இனிப்பு என்றால் இஷ்டம்; மதராசிகளுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்! மெகா சர்வே முடிவுகள்!

இந்தியாவின் பெருநகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி நாட்டிலேயே குறைவாக இனிப்பு உட்கொள்பவர்கள் ஹைதராபாத்வாசிகள் என்பதும், இந்தியாவில் அதிகமா இனிப்பு எடுத்துக்கொள்பவர்கள் அகமதாபாத் நகர வாசிகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி,, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையில் யார் அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறார்கள் என்பது குறித்தும், யார் அதிகமாக உணவில் உப்பை சேர்க்கிறார்கள் என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

கோடையில் வெப்பத்தை தணிப்பதற்காக பழ ரசங்கள், லஸ்ஸி, நீர் மோர் போன்ற பொருட்களை மக்கள் அதிகமாக உட்கொள்வதால் அவற்றில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள 27 வகையான உணவுப் பொருட்களை தேர்வு செய்து, அதை யார் விரும்பி உண்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதில் பழரசங்கள், லெஸ்ஸி உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள் மட்டுமே தேசிய அளவில் பிரபலமாக இருக்கின்றன. அதாவது 27 வகையான உணவுப் பொருட்களில் ஐந்துக்கும் குறைவான உணவுப்பொருட்களை மட்டுமே நாடு முழுவதும் மக்கள் விரும்பி உண்பது தெரிய வந்துள்ளது.

இதில் ஆண்களைப் பொறுத்தவரை அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இனிப்புப் பொருட்களை உட்கொள்கிறார். அதற்கு அடுத்தபடியாக மும்பையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இனிப்பு எடுத்துக் கொள்கிறார்கள்.

பெண்களைப் பொறுத்தவரை மும்பையைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக இனிப்பு எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு அடுத்த நிலையில் அகமதாபாத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக உணவில் இனிப்பு சேர்த்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவிலேயே இனிப்பு குறைவாக உட்கொள்பவர்கள், தென்னிந்தியர்கள்தான். அதிலும் குறிப்பாக ஹைதராபாத், சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆணோ, பெண்ணோ நாட்டிலயே குறைவான இனிப்பை உட்கொள்பவர்கள் ஹைதராபாத் அல்லது சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

சரி, எந்தளவுக்கு இனிப்பு எடுத்துக்கொள்ளலாம்? இனிப்பைப் பொறுத்தவரை பெரியவர்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். இளைஞர்களாக இருந்தால் 30 கிராம் வரை எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள், டயாட்டீசிஷன் நிபுணர்கள். உப்பைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2 கிராம் வரை உணவில் உப்பு சேர்க்கலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று நம்மூரில்தான் சொல்லியிருப்பதை மறக்கவே கூடாது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com