குருகிராம் துயரம்! ஓயோ ரூம்ஸ் நிறுவனர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை 20 வது மாடியில் இருந்து விழுந்து மரணம்!

குருகிராம் துயரம்! ஓயோ ரூம்ஸ் நிறுவனர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை 20 வது மாடியில் இருந்து விழுந்து மரணம்!

ந்திய பன்னாட்டு ஹாஸ்பிடாலிட்டி சங்கிலித் தொடர் நிறுவனங்களில் ஒன்றான ஓயோ ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை, ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் 20 வது மாடியில் இருந்து விழுந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குருகிராம் காவல்துறையின் கூற்றுப்படி, பிரிவு 54 இல் அமைந்துள்ள தி க்ரெஸ்ட் சொஸைட்டியின் 20 வது மாடியில் இருந்து ஒருவர் விழுந்துவிட்டார் என்றும்,  பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக உடனடியாக பாராஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் டிஎல்எஃப் பாதுகாப்பிலிருந்து முதலில் ஒரு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதியில் நடத்திய சோதனையில், விழுந்து கிடந்தவர் ரமேஷ் பிரசாத் அகர்வால் என அடையாளம் காணப்பட்டது. ஆனால் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது அதற்கு அவசியமின்றி "அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்" என்று குருகிராம் கிழக்குப் பகுதி காவல்துறை துணை ஆணையர் வீரேந்திர விஜ் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் மகன்களில் ஒருவரான ஆஷிஷ் அகர்வாலிடம் இது தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார், அதன் பிறகு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 இன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்பதன் கீழ் இந்த வழக்குக்கான விசாரணை அறிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நடைமுறையின்படி, இறந்தவரின் பிரேத பரிசோதனை உள்ளூர் மருத்துவமனையில் நடத்தப்பட்டது, அது முடிந்ததும் இறவந்தவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், ஓயோவின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ரித்தேஷ் பதிவிட்ட இரங்கலில் "ஒவ்வொரு நாளும் எங்களது வழிகாட்டும் ஒளியாக விளங்கி எங்களது வலிமைக்கு காரணமானவராக இருந்த, என் தந்தை ஸ்ரீ ரமேஷ் அகர்வால் மார்ச் 10 அன்று காலமானார் என்பதை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம், அவரது மரணம் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.என் தந்தையின் கருணையும் அரவணைப்பும் எங்களின் கடினமான காலங்களில் எங்களைக்  முன்னேற்றிச் சென்றது. அவரது வார்த்தைகள் எங்கள் இதயங்களில் ஆழமாக ஒலிக்கும்.மிகவும் துக்ககரமான இந்த நேரத்தில் அனைவரும் எங்களது வருத்தத்தைப் புரிந்து கொண்டு எங்களது பிரைவஸியை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" - என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வார தொடக்கத்தில், 29 வயதான ரிதேஷ்  அகர்வால், ஃபார்மேஷன் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனரான கீதன்ஷா சூட்டை மணந்தார், அதன் பிறகு மார்ச் 7 அன்று டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றான தாஜ் பேலஸில் குடும்பத்தினர் அவரது குடும்பத்தினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இந்த திருமண விழாவில் சாப்ட் பேங்க் குழும நிறுவனர் மசயோஷி சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com