அரை முழம் மல்லி பூ வெச்சது ஒரு குற்றமா..? ரூ.1.14 லட்சம் அபராதம் கட்டிய நடிகை நவ்யா நாயர்..!

Fresh Malli flower
Fresh Malli flower
Published on

கேரளாவின் செல்லமகள், ரசிகர்கள் கொண்டாடும் நடிகை நவ்யா நாயர், சமீபத்தில் மெல்போர்னில் நடந்த ஓணம் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்தார்.

இந்தச் சிறப்புப் பயணத்திற்காக அவர் தேர்ந்தெடுத்த நடையும் உடையும் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

பாரம்பரிய கேரள உடை அணிந்து, ஒரு மல்லிகைப் பூச்சரத்தை கூந்தலில் அணிந்தபடி விமானத்தில் அமர்ந்து, "வானத்தில் முதல் திருவோணம்" என்று மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இந்த ஒற்றை வரியிலேயே, அவரது கொண்டாட்டமும் பூரிப்பும் முழுமையாக வெளிப்பட்டது.

ஆனால், அவரது பயணம் மகிழ்ச்சியுடன் முடிவடையவில்லை. மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியபோது, எதுவும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. வழக்கமான சோதனைகளின் போது, சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென அவரை வழிமறித்தனர்.

நவ்யா நாயர் சற்று குழப்பத்துடன், "என்ன நடக்கிறது?" என்பது போல் அதிகாரிகளைப் பார்த்தார்.

அதிகாரிகளின் கேள்வி நவ்யாவிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய கைப்பைக்குள் இருந்த ஒரு 15 செ.மீ நீளமுள்ள மல்லிகைப் பூச்சரத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

"இந்த உயிரற்ற பூக்களால் என்ன தீங்கு?" என்று அவர் திகைத்தார். ஆனால், அவருடைய அறியாமை அவரை ஒரு பெரிய சட்ட சிக்கலில் சிக்க வைத்தது.

ஆஸ்திரேலியாவில் உள்ள கடுமையான உயிரியல் பாதுகாப்புச் சட்டங்கள், வெளிநாடுகளிலிருந்து தாவரப் பொருட்களைக் கொண்டு வருவதற்குத் தடை விதித்துள்ளன.

இதைப் பற்றி அறியாத நவ்யா, தான் கொண்டுவந்த மல்லிகைப் பூவின் விலை ஒரு லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

விதிமீறலுக்காக அவருக்கு AUD 1,980 அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ 1.14 லட்சம் ஆகும்.

"நான் வேண்டுமென்று தவறு செய்யவில்லை. ஆனால் சட்டத்தின் அறியாமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை உணர்ந்தேன். இந்தச் சம்பவம் எனக்கு ஒரு நல்ல பாடம்" என்று அவர் கூறினார். இந்த அசாதாரண அனுபவத்தை அவர் நகைச்சுவையுடன் கையாண்டார்.

தனது இன்ஸ்டாகிராமில், அபராதம் செலுத்துவதற்கு முன் எடுத்த புகைப்படத்தை, "அபராதம் செலுத்துவதற்கு முன் ஒரு ஷோ-ஆஃப்" என்று தலைப்பிட்டு பதிவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com