24 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் இயக்கம்!

24 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் இயக்கம்!
media-cldnry.s-nbcnews.com

கடந்த 1.5 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ஐந்து நாட்கள் சண்டையை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, 24 இஸ்ரேல் பிணைக்கைதிகள் ஹமாஸ் குழுவினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர், ஏவுகணை தாக்குதல் நடத்தி ஏராளமான நபர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் ஹமஸ் படையினர் உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக காசா பகுதியை சுற்றி வளைத்த இஸ்ரேல், அங்கு நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும் பலியாகின்றனர்.

இப்படி இருக்கும் சூழலில், அங்கு தற்காலிக போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த அறிவிப்பு நேற்று காலை சரியாக 10 மணிக்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த நான்கு நாள்களுக்கு  இரு தரப்பினரும் போரில் ஈடுபட மாட்டார்கள். அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேல் நாட்டவர்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து வருகிறது. 

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே, ஒவ்வொரு தொகுதியாக மொத்தம் 24 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இஸ்ரேலும் 39 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுதலை செய்துள்ளனர். ஹமாஸ் குழுவினர் விடுவித்த 24 பேரில் 13 நபர்கள் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். 10 பேர் தாய்லாந்து சேர்ந்தவர்கள். மற்றொரு நபர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். 

அதே நேரம் நேற்று அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் யாரும் விடுவிக்கஎனப்படவில்லை. ஆனால் இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் அமெரிக்கர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இந்த போர் நிறுத்தத்தில் மேலும் 50 பிணைக் கைதிகளாவது ஹமாஸ் குழுவினரால் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் நம்புகிறது. அதேபோல இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com