"பிணைக் கைதிகளை கொன்று விடுவோம்" என ஹமாஸ் படையினர் எச்சரிக்கை!

Hamas soldiers warning.
Hamas soldiers warning.

ஹமாஸ் படையினரின் கோரிக்கைகளை இஸ்ரேல் நிறைவேற்றவிட்டால், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் பிணைக் கைதிகள் உயிருடன் நாடு திரும்ப மாட்டார்கள் என எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் படையினர் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் காசா மீது நடத்தும் தொடர் தாக்குதல்களால் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் படைத்தலைவர், ஹமாஸ் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என அறிக்கை வெளியிட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பு அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த அக்டோபர் 8ம் தேதி ஹமாஸ் படையினர் திடீரென இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் 240 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்ற நிலையில், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன நாட்டவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. மேலும் இந்த தாக்குதலால் சர்வதேச அளவில் இஸ்ரேலின் மதிப்பு குறைந்ததால், இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்காமல் போரை நிறுத்துவதில்லை என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர். 

சமீபத்தில் ஏழு நாட்கள் நடந்த தற்காலிக போர் நிறுத்தத்தில் 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர். இதற்கு இணையாக இஸ்ரேல் நாட்டில் இருந்த பாலஸ்தீன கைதிகள் 240 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் ஹமாஸ் படையினரின் இந்த அறிக்கை பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

போரை நிறுத்துவது தொடர்பான ஐநா தீர்மானத்தை யாரும் ஏற்காத நிலையில் இந்த போர் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com