சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஹனுமத் ஜெயந்தி விழா!

சுசீந்திரம் அருள்மிகு ஶ்ரீ தாணுமாலயன் திருக்கோயில்
சுசீந்திரம் அருள்மிகு ஶ்ரீ தாணுமாலயன் திருக்கோயில்

கன்னியாகுமரியில் சுசீந்திரத்திலுள்ள பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி ஆலயத்தில் இன்று ஹனுமத் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது. ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில், 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோயிலில் வருடந்தோறும் ஹனுமத் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஹனுமத் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

அதன்படி இன்று காலை 5 மணிக்கு இக்கோயிலிலுள்ள ஶ்ரீராமர் மற்றும் சீதைக்கு சிறப்பு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு 1500 லிட்டர் பால், மஞ்சள் பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், திரவிய பொடி, பன்னீர், அரிசி மாவு பொடி, விபூதி, தயிர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, குங்குமம், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான ஷோடச அபிஷேகங்கள்  நடைபெற்றது.

ஆஞ்சநேயர் சுவாமி
ஆஞ்சநேயர் சுவாமி

பின்னர் நண்பகலில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதன் பிறகு மாலையில் ஶ்ரீராமர், சீதை, மற்றும் ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இந்த ஹனுமத் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். அவர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டு, தட்டுவடை தயாரிக்கப் பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com