ராஜீவ்காந்தியின் மறைவு குறித்து சோனியாவிடம் கேள்வி கேட்ட பெண் விவசாயி!

விவாசயிகளுடன் சோனியா காந்தி
விவாசயிகளுடன் சோனியா காந்தி
Published on

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா, ப்ரியங்கா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளுடன் சமீபத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது, பெண் விவசாயி ஒருவர் சோனியாகாந்தியின் ராஜீவ் காந்தியின் பிரிவு குறித்து கேள்வி எழுப்பினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு இருந்தார். அப்போது ஹரியானா மாநிலத்தில் பயணம் மேற்கொண்டிருந்த போது பெண் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர்கள் டெல்லியை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ராகுலிடம் கேட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம்  ஹரியானாவை சேர்ந்த பெண் விவசாயிகளை டெல்லிக்கு அழைத்து வந்து அவர்கள் சுற்றி பார்க்க ராகுல் காந்தி ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து தனது இல்லத்தில் ராகுல் காந்தியை பெண் விவசாயிகளுக்கு விருந்தளித்தார். அப்போது பதிவுச் செய்யப்பட்ட வீடியோவை தற்போது காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடே பகிர்ந்துள்ளார்.

அதில், ஒரு பெண் விவசாயி சோனியா காந்தியிடம் ராஜீவ் காந்தி இறந்த பிறகு நிலைமையை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்க, "மிகுந்த வருத்தம் இருந்தது" என்று கூறி வார்த்தையை நிறுத்துகிறார் சோனியா. இதைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி “ அப்பாவின் மரணத்திற்கு பிறகு நீண்ட காலம் துயரத்தில் நிலை குலைந்து காணப்பட்டார் என் அம்மா. பல நாட்கள் உடம்பை வருத்திக்கொண்டு சாப்பிடவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. என் தந்தையின் இறப்பு குடும்பத்தில் மிகுந்த துயரமான சம்பவம்” என்று குறிப்பிட்டார்.

அப்போது மற்றொரு பெண் விவசாயி சோனியா காந்தி பல சிரமங்களை சந்தித்து உள்ளார். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார் என்று கூறினார். இவைகளை ராகுல் காந்தி அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

_____

#ஹரியானா #பெண் விவசாயிகள் #ராகுல் காந்தி #சோனியா காந்தி #பிரியங்கா காந்தி #காங்கிரஸ் #ராஜீவ் காந்தி

#Haryana #women farmer #Bharat jade Yatra #Rahul Gandhi #Sonia Gandhi #Priyanka Gandhi #Congress #Rajiv Gandhi

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com