ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறங்கும் ஹார்லி - டேவிட்சன் பைக்!

Harley Davidson vs royal Enfield
Harley Davidson vs royal Enfield
Published on

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக புதிய பைக்கை ஹார்லி - டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாகவே ஆண்களுக்கு பைக் மீது ஒரு ஆசை இருக்கும். அதுவும் சில பசங்களுக்கு பைக் வாங்குவதே கனவாகவே இருக்கு. சிலர் லோன், இஎம்ஐ அப்படினு பைக்கை வாங்கி ஆசையை நிறைவேற்றிக்கிறாங்க. அதுவும் குறிப்பா ராயல் என்பீல்டு பைக் மீது ஆண், பெண் என இரு பாலரும் ஒரு தனி ஆசை இருக்கு. அந்த வகையில் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியா ஹார்லி டேவிட்சன் நிறுவனம் களமிறக்கிய அசத்தலான பைக் குறித்த அப்டேட்டை பார்க்கலாம்.

ஹீரோ மோட்டர்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட X440 மாடல் பைக், டெனிம், விவிட், பினாக்கில் என 3 வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. டெனிம் வகை பைக்கின் Ex-Showroom விலை 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 440சிசி திறனுடைய இந்த பைக் 35 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் டைம் மைலேஜ், கியர் இண்டிகேட்டர் மற்றும் ஸ்மார்ட் போனுடன் இணைத்துக்கொள்ளும் வகையிலான வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகளை ஏற்பது மட்டுமின்றி, கேட்கும் பாடல்களையும் பைக்கிலேயே மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹார்லி - டேவிட்சன் X440 பைக்கிற்கான புக்கிங் நாளை முதல் தொடங்கும் எனவும், 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி புக் செய்து கொள்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹார்லி - டேவிட்சன் பைக்குகளை விட, விலை குறைவு என்பதால் ராயல் என்ஃபீல்டுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com