கார்ப்பரேட் அலுவலகங்களில் மது அருந்த ஹரியானா அரசு அனுமதி!

கார்ப்பரேட் அலுவலகங்களில்  மது அருந்த ஹரியானா அரசு அனுமதி!

ஹரியானா மாநிலத்தின் புதிய மதுபான கொள்கையின்படி முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு, இனிமேல் கார்ப்பரேட் அலுவலகங்களில் மது அருந்தவும், மதுபானங்களை வைத்துக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.

ஹரியானாவில் ஆட்சி செய்துவரும் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு, மாநிலத்தின் நிதி தேவையைப் பூர்த்தி செய்ய புதிய மதுபான சட்டமம் 2023- 24ஐ கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் அம்மாநிலத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் விரைவில் பீர் மற்றும் ஒயின் உள்ளிட்ட குறைந்த ஆல்கஹால் அளவை கொண்ட மதுபானங்களை வழங்கும் கேன்டீன்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.

ஆனால், இதற்கு சில நிபந்தனைகளையும் முதலமைச்சர் மனோர் லால் கட்டார் அரசு விதித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி மற்றும் 5 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள் மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ள ஆல்கஹால் குறைவான மதுபானங்கள் விற்கமுடியும். அதேபோல் மதுபானம் விற்பனைச் செய்யப்படும் கேண்டீன் 2 ஆயிரம் சதுர பரப்பளவு கொண்டதாக இருக்கவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. அதேபோல், மதுபானங்கள் விற்பனைச் செய்யும் கார்ப்பரேட் அலுவலகங்கள் அரசு கூடுதலாக ரூபாய் 3 லட்சத்தைச் சத்தை செக்யூரிட்டியாக செலுத்தவேண்டும், மதுபானம் விற்க உரிமம் பெற்ற அலுவலகம் பொதுமக்கள் அடிக்கடி செல்லும் எந்த பகுதியிலோ அல்லது ஒரு வழிப்பாதையாகவோ இருக்கக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com