விதிமுறைகளை மீறியதா ஆம் ஆத்மி?

 உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on

உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விளம்பரக் கொள்கைகளை கெஜ்ரிவால் அரசு மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2016ல் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், விளம்பரக் கொள்கையில் தவறாகக் கண்டறியப்பட்ட விளம்பரங்களுக்கு செலவழித்த தொகையை மதிப்பிடுமாறு உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவிடம் டெல்லி துணைநிலை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

தற்போது விளம்பரத்துக்காக செலவிடப்பட்ட 97 கோடி ரூபாய் பொதுநிதியை ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து வசூலிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

kejriwal
kejriwal

டெல்லிக்கு வெளியே ஊடகங்களில் விளம்பரம் செய்ததற்காகவும், விளம்பரங்களில் ‘ஆம் ஆத்மி‘ என்று குறிப்பிட்டதற்காகவும், மற்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த முதலமைச்சரின் கருத்துகளை விளம்பரப் படுத்தியதற்காகவும், அரசு விளம்பரங்களில் எதிர்க் கட்சிகளை குறி வைத்து விளம்பரப் படுத்தியதாகவும் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், நான்கு வகை விளம்பரங்களுக்காக கெஜ்ரிவால் அரசு ரூ.97 கோடி செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்சியை பிரதானப் படுத்திய விளம்பரங்களை அரசு விளம்பரமாக கூறி பிரசுரித்துள்ளதால் அந்த தொகை முழுவதையும் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்க தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த பணத்தை, உடனடியாக வசூலித்து அரசு கருவூலத்தில் செலுத்துமாறும் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு விளம்பரங்களில் பொது நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து அந்த தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை தற்போது டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தொடங்கியுள்ளார்.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com