நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தன் வங்கியில் செய்துள்ள ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 0.30 சதவீதம் வரை வட்டியை உயர்த்தித் தருவதாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 7 முதல் 29 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு 3% வட்டியும், 1 வருடம் முதல் 15 மாதம் வரையிலான வைப்புத் தொகைக்கு 6.10% வட்டித் தொகையும் 2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை 6.50% ஆகவும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் சீனியர் சிட்டிசன்களின் வைப்பு தொகைகளுக்கு கூடுதல் வட்டி வழங்கப் படும் என்றும் இந்த புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.