ஓராண்டுக்கு மேலாக கிரெடிட் கார்டை பயன்படுத்தவில்லையா? இதை உடனே செய்யவும்!

ஓராண்டுக்கு மேலாக கிரெடிட் கார்டை பயன்படுத்தவில்லையா? இதை உடனே செய்யவும்!

ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கிரெடிட் கார்டுகளை கண்டறிந்து அவற்றை ரத்து செய்யுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. நிதியாண்டின் ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட உத்தரவை பெரும்பாலான வங்கிகள் கண்டுகொள்ளவில்லை. ஒரு சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு கேன்ஸல் செய்யட்டுமா, வேண்டாமா என்று கேட்டுக்கொண்டார்கள்.

கேன்ஸல் செய்துவிடும்படி கேட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களில் நிறைய பேர், ரெக்வெஸ்ட அனுப்பியதோடு சரி. பின்னர் அதை பாலோ அப் செய்யவில்லை. விளைவு? கேன்ஸல் பிராசஸ் கட்டணம், அதை கட்டாததால் தாமதக்கட்டணம் என்று ஏகப்பட்டவை நிலுவையில் இருக்கின்றன.

மகேஷ், ஒரு பன்னாட்டு கம்பெனியில் ஜாவா டெவலப்பராக இருக்கிறார். நான்கு கிரெடிட் கார்டு வைத்திருந்தார். அன்றாட செலவுகளுக்காக ஒரு கிரெடிட் கார்டையும், வெளியூர் பயணங்களுக்கு இன்னொரு கார்டையும் பயன்படுத்தி வந்தார். அவசரத் தேவைகளுக்காகவும் ஒரு கார்டு வைத்திருந்தார். கிரெடிட் கார்டு வித் 3 லட்சம் டிராப்ட் வசதியோடு ஒரு ஆபரில் கிடைத்ததால் கூடுதலாக ஒரு கார்டையும் வைத்திருந்தார்.

நான்கு கிரெடிட் கார்டில், இரண்டு அதிகமாக பயன்படுத்துவதில்லை. ஓராண்டிற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருநத காரணத்தால் வங்கியிலிருந்து கேட்டபோது, கேன்ஸல் செய்வதற்கு ஒப்புக்கொண்டார். ஒரிரு மாதங்கள் கழித்து கிரெடிட் ஸ்கோர் பார்க்கும்போது கிரெடிட் புள்ளிகள் வெகுவாக குறைந்து இருந்தன. கிரெடிட் கார்டு கேன்ஸ்ல் செய்யப்பட்டபோது, அதற்காக பிராசஸ் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது. கேன்ஸல் ரெக்வெஸ்ட கொடுத்தவுடன் அனைத்தையும் மறந்துவிட்டார்.

கடந்த ஓராண்டாக ஜிபே, பேடிஎம் போன்ற சேவைகள் வந்தபின்னர் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. இரண்டுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கூடுதல் கிரெடிட் கார்டுகளை கேன்ஸல் செய்துவிட முடிவு செய்கிறார். ஆனால், அதை எப்படி முறையாக செய்யத் தவறுவதில்தான் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.

முன்னர் கிரேடிட் கார்டு கேன்ஸல் செய்வது என்பது கஷ்டமான காரியம். கிரெடிட் கார்டு தந்த வங்கியை தேடிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு அனைத்து கட்டணங்களையும் கட்டிமுடித்து கணக்கை முடிப்பதற்கு பல காலமாகிவிடும். ஆனால், தற்போது கேன்ஸல் செய்வது எளிதான விஷயமாகிவிட்டது. ஆனால், அதை பாலோ அப் செய்யாவிட்டால் இழப்புகள் அதிகம்.

வாடிக்கையாளர்களிடமிருந்து கேன்ஸ்ல் ரெக்வெஸ்ட் வந்தால் உடனடியாக அதை பிராசஸ் செய்யாமல் வங்கி தாமதப்படுத்தும்போதுதான் அனைத்து சிக்கல்களும் எழுகின்றன. 30 நாட்களுக்குள் அதை செய்து முடிக்காவிட்டால், அடுத்த முறை வந்துவிடும். அதற்கான குறைந்தபட்ச கட்டணம், அதை கட்டாவிட்டால் தாமதக்கட்டணம் என்று ஏதாவது நிலுவைத் தொகை நிச்சயம் வந்துவிடும்.

கிரெடிட் கார்டை கேன்ஸல் செய்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கியுடனான உறவும் முடிவுக்கு வந்துவிடுவதால் புகார் அளிக்கவும் முடியாது. ஹெல்ப் டெஸ்க் எதையும் தொடர்பு கொள்ளவும் முடியாது. கேன்ஸல் நடைமுறையில் ஏதாவது சிக்கல் இருந்தால் கூட சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அது பற்றி தெரியப்போவதில்லை.

சிக்கலில் இருந்து தப்பிக்க ஒரே வழி, கேன்ஸல் செய்யப்பட்டு விட்டதாக வங்கியிடமிருந்து கன்பர்மேஷன் பெறுவதுதான். சம்பந்தப்பட்ட வங்கியில் சேமிப்புக்கணக்கோ அல்லது வேறெந்த கடன் வாங்கியிருந்தாலோ இதை எளிதாக டிராக் செய்ய முடியும். இல்லாவிட்டால், கஷ்டம்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com