உலகின் 4வது பெரிய வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ள HDFC!

உலகின் 4வது பெரிய வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ள HDFC!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கி உடன் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிடிஎப்சி இணைக்கப்பட உள்ளது. இந்த இணைப்பின் மூலம் உலகின் பல வங்கிகளை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC Bank இணைப்பு குறித்து தேவையான ஒப்புதல்களை சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் வர்த்தக நேரத்திற்கு பின்பு சந்திக்க உள்ளது என HDFC சேர்மந் தீபக் பாரிக் தெரிவித்தார்.

ஜூலை 1 முதல் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி ஒன்றாக இணைக்கப்படும் என்று, இதற்காக ஜூன் 30 ஆம் தேதி ஹெச்டிஎப்சி-யின் கடைசி நிர்வாக குழு கூட்டம் நடக்க உள்ளதாக HDFC சேர்மன் தீபக் பாரிக் தெரிவித்தார்.

சந்தை மதிப்பீட்டு அளவில் பார்க்கும் போது உலகளவில் 416.5 பில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் முதல் இடத்தில் உள்ளது. 228.3 பில்லியன் டாலர் உடன் சீனாவின் ICBC, 227.7 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் பேங்க் ஆப் அமெரிக்கா 3வது இடத்திலும், இணைக்கப்பட்ட பின்பு 171.8 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் 4வது இடத்தில் உள்ளது. இதன் பின்பு சீன விவசாய வங்கி, சீன கட்டுமான வங்கி, HSBC, வெல்ஸ் பார்கோ, பேங்க் ஆப் சீனா, மோர்கன் ஸ்டான்லி ஆகியவை டாப் 10 இடங்களை உலகளவிலான அதிக சந்தை மதிப்பீடு கொண்ட வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைப்பிற்கு பின்பு சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடனும், 8300 வங்கி கிளைகள் உடனும், 177000 ஊழியர்கள் உடனும் இன்னும் வலிமை பெற உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள எனில் இது ஜெர்மனி நாட்டு மக்களை தொகையை காட்டிலும் அதிகமானது என்கிறார்கள். ஜூலை 1 ஆம் தேதி முதல் இணைப்பு நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் இன்று 2.3 சதவீதம் வரையில் வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com