பிச்சைக்காரர் வேடத்தில் சென்று ஐபோன் 15 வாங்கியவர். என்னடா இது புது அலப்பறையா இருக்கு!!

பிச்சைக்காரர் வேடத்தில் சென்று ஐபோன் 15 வாங்கியவர்.
என்னடா இது புது அலப்பறையா இருக்கு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் யூடியூபர் ஒருவர் பிச்சைக்காரர் போல் வேடமணிந்து ஒரு மூட்டை சில்லறைகளை கொண்டுவந்து ஐபோன் 15 வாங்கியது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஐபோன் வாங்குவது இப்போது அனைவருக்குமே பெரும் கனவாக உள்ளது. அதிலும் இன்றைய மிடில் கிளாஸ் இளைஞர்களுக்கு சொல்லவே தேவயில்லை. எப்படியாவது ஐபோன் வாங்கிவிட வேண்டுமென்று துடியாய் துடிக்கிறார்கள்.

இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலும் ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்தே அவரை எடைப் போடுங்கின்றனர். அதுவும் அவர்களின் பொருளாதார நிலையை வைத்து மதிப்பிடுவது மிகவும் இயல்பான ஒன்றாக இருப்பது கசப்பான உண்மை. அதன் அடிப்படையில் தான் பிச்சைக்காரர் வேடம் போட்டுக்கொண்டு கடைக்கு சென்று ஐபோன் வாங்கும் வீடியோ எடுக்கப்பட்டது.

”Experiment king” என்ற யூட்யூப் சேனலில் ஒரு ஐந்து நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோ வெளியிடப் பட்டது.வெளியிட்ட சில மணி நேரத்திலையே 33.7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 3.4 மில்லியன் லைக்ஸ்களையும் அள்ளி சென்றது.

பிரான்க் வீடியோவில் அந்த யூட்யூபர் பிச்சைகாரர் போல் வேடமணிந்து ஜோத்பூரில் ஒவ்வொரு கடையாக சென்றார். ஆனால் வெகுநேரம் அழைந்தும் எந்த கடைகளிலும் உள்ளே கூட விடாமல் அப்படியே வெளியே அனுப்பினர். ஆனால் இறுதியாக ஒரு கடையில் மட்டும் உள்ளே அனுப்பினர். அங்கு வேலைப் பார்ப்பவர்கள் அவரைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் அப்படியே நின்றிருந்தனர்.பிறகு அந்த கடையின் முதலாளி வெளியே வந்து சில்லறைகளை எடுத்துக்கொண்டு ஐபோன் ப்ரோ மேக்ஷ் 15 அவருக்கு வழங்கினார். அனைத்து பரிவர்த்தனைகளும் முடிந்த பின்னர் அந்த யூட்யூபர் தனது வேடத்தை கலைத்து அது ஒரு பிரான்க் என்று சொன்னவுடன் கடைக்காரருக்கு இன்னும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இதற்கு யூட்யூப் பார்வையாளர்கள் இதெல்லாம் பழைய ஸ்கிரிப்ட் எதாவது புதுசாக செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். எவ்வளவுதான் பழசாக இருந்தாலும் கூட, பொழுதுப்போக்குகாக எடுக்கப்படும் ஒரு பிரான்க் வீடியோவாக இருந்தாலும், கூட, சமுதாயத்தின் கசப்பான நிலையை தானே நேரலையாகவே கூறியிருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com