வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகள் மற்றும் நெறிமுறைகள்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வெப்ப அலை  குறித்த எச்சரிக்கைகள் மற்றும் நெறிமுறைகள்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை தாக்கி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த நான்கு நாள்களுக்கு மாலை 4 மணிவரை வெப்ப அலை வீசும் எனவும் கூறியுள்ளனர்.

குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அதில், வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

ஆல்கஹால், டீ, காபி, சர்க்கரை அதிகமுள்ள வயிற்றுப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பழைய உணவை சாப்பிடக் கூடாது.

பார்க் செய்யப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள், செல்லப் பிராணிகளை அதிக நேரம் விட்டு செல்லக் கூடாது. அதில் உள்ள வெப்பம் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப் பொருள்களை குறைத்து, உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

வெளியில் செல்வதாக இருந்தால் முழுதாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.

பெரும்பாலும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக வெளியில் செல்லும் போது கையில் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.

தர்பூசணி, முலாம்பழம், இளநீர், ஓ.ஆர்.எஸ், மோர், பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும்.

நல்ல காற்றோட்டமான பகுதியில் இருக்க வேண்டும். சூரிய ஒளி நேரடியாக படுவதைத் தவிர்க்க குடை, தொப்பி, துண்டு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

வானிலை குறித்த அறிவிப்புகளை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர், பேரிடர் மேலாண்மை எச்சரிக்கையுடன் இதை கண்காணிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com