சில்லுனு ஒரு செய்தி..! இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்..!

rain
rain
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னை வானிலை மையம் அறிக்கை:

மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக்கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயவர்மா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை* தேனி* ஈரோடு* திருப்பூர்* திருச்சி* நாமக்கல்* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரி

மே 1ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடு* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்* தேனி

மே 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி, * கோவை, * திருப்பூர், * திண்டுக்கல், * தேனி, * மதுரை, * விருதுநகர், * சிவகங்கை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com