நியூயார்க்கில் கடும் பனிப் பொழிவு; அவசர நிலை அறிவிப்பு!

நியூயார்க்கில் கடும் பனிப் பொழிவு; அவசர நிலை அறிவிப்பு!

அமெரிக்காவின் நியூயார்க்கில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பலத்த பனிகாற்றும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப் பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நியூயார்க்கில் வழக்கத்துக்கு மாறாக கடந்த 24 மணி நேரத்தில் 180 செ.மீ பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியூயார்க்கில் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளார். 

 'எங்கள் கோரிக்கையை ஏற்று அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்கு அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது குழு மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது' என நியூயார்க் மேயர் ஹோசல் தெரிவித்துள்ளார். 

காலநிலை மாற்றம் காரணமாக உலலில் பல நாடுகளில் மோசமான வானிலை நிலவுகிறது. வறட்சி,வெள்ளம், புயல் தீவிர பனிப்பொழிவு, மழை ஆகியவற்றை உலக நாடுகள் எதிர் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com