ஆன்மிக சுற்றுலா சென்ற ஹெலிகாப்டர் விபத்து! சென்னை பக்தர்கள் பலி!

ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்து
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கேதார்நாத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட சென்னையை சேர்ந்த மூவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இருந்து மூவரும் கேதர்நாத்தில் உள்ள ஸ்தலத்திற்கு பத்தி சுற்றுலா சென்றவர்கள். விபத்தில் உயிரிழந்த இவர்கள் பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மூலமாக ஆன்மீக சுற்றுப்பயணமாக கேதர்நாத் சென்றுள்ளனர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அதில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகியோர் சென்னையை திருமங்கலம் பகுதியில் உள்ள சாந்தம் காலனியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

தேடுதல் பணி
தேடுதல் பணி

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இந்த ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் இருவர் விமானிகள் என்றும் உறுதியானது. இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில அரசாங்கம், மீட்புப்பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டிருந்ததை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com