

நவீன காலத்தில் சுற்றுலாத் திட்டங்களை விரிவுபடுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரயில்கள் மற்றும் கப்பல் வழிச் சுற்றுலாத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் உள்ளது போல, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வேளாங்கண்ணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஹெலிகாப்டர் ஓடுதளம் (Helipad) வேளாங்கண்ணி பேராலயத்திற்குச் சொந்தமான இடத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தென் தமிழகத்தில் வேளாங்கண்ணி ஒரு மிக முக்கியமான ஆன்மீகத் தலமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களும், கோடியக்கரை பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளன. வேளாங்கண்ணிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களைக் கவரும் வகையில் தற்போது ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிலும் வேளாங்கண்ணிக்கு பல மாநிலங்களிருந்து மட்டுமில்லாமல் பல நாடுகளில் இருந்தும் தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்.இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலம் வேளாங்கண்ணியை சுற்றிப்பார்க்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஹெலிகாப்டர் சுற்றுலா - கட்டணம் எவ்வளவு?
ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்காக ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் வேளாங்கண்ணியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிபார்க்கும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சுற்றுலாவில் ஒருவருக்கு 6000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக ஹெலிகாப்டர் ஒன்று பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு கொண்டுவரப்படவுள்ளது.இந்த மாத இறுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே தற்போது ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு இயங்கும் வகையிலும் ஹெலிகாப்டர் பயணம் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.