ராணுவப் பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள் மோதல்: 3 அமெரிக்க வீரர்கள் பலி!

ராணுவப் பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள் மோதல்: 3 அமெரிக்க வீரர்கள் பலி!

மெரிக்காவில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்கா மாகாணத்தில் இருக்கும் ஹீலி என்ற பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் சிலர் ராணுவப் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நடு வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர் விமானங்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது.

அதனையடுத்து, கீழ் நோக்கி வந்த அந்த இரண்டு ஹெலிகாப்டர் விமானங்களும் தரையில் விழுந்து முழுவதுமாக நொறுங்கிப் போனது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார்கள். உயிருக்குப் போராடிய மற்றொரு ராணுவ வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த ஹெலிகாப்டர் விமான விபத்து சம்பவத்தின்போது அங்கிருந்த மற்றொரு ராணுவ வீரருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சக ராணுவ வீரர்கள் அவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com